பணமோசடி வழக்கில் கேரள முன்னாள் பொதுப்பணித்துறை அமைச்சரும், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் எம்எல்ஏவுமான விகே இப்ராஹிம் குஞ்சுவுக்கு அமலாக்க இயக்குநரகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
அதுமட்டுமின்றி, விகே இப்ராஹிம் குஞ்சு தனது வருமானம், சொத்துக்களின் விவரங்களை சரிபார்ப்புக்காக சமர்பிக்கும்படி அமலாக்கத்துறை கேட்டுள்ளது.
2016 ஆம் ஆண்டில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் அதிகாரப்பூர்வ தினசரி நாழிதளான சந்திரிகாவின் கணக்கில் சுமார் 10 கோடி ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டதையடுத்து இப்ராஹிம்மிற்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க...'சசிகலாவின் முடிவு எனக்கு சோர்வு' -டிடிவி வருத்தம்