ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநில தலைநகர் ராஞ்சியில் சில தினங்களுக்கு முன் கனிமவளத் துறையில் நடந்த பெரும் பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட பூஜா சிங்லாலின் வாட்ஸ்அப் உரையாடலை எடுத்து பார்த்த போது பூஜா பல கோடி பரிவர்த்தனைகளை நடத்தியிருப்பது தெரியவந்துள்ளது.
அவருக்கும் அவரது கணவர் அபிஷேக்கிற்கும் நடந்த சாட்சிகளில் இந்த பணபரிவர்த்தனைகள் செய்யப்பட்டது தொடர்பான உரையாடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கிடையில்,ராஞ்சி அமலாக்கத் துறை பிரிவு பூஜாவிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த விசாரணையில் சரோகி கட்டட நிறுவனத்திற்கு பல கோடிகளை அனுப்பியுள்ளதும். பூஜாவின் கணவிரின் பெயரில் புதியதாக கட்டப்படும் பல்ஸ் மருத்துவமனை கட்டடபணிக்காக பரிமாற்றப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளன.
இந்த நிறுவனத்திற்கு எந்த வழியில், யாருடைய பெயரின் செக்கில் பரிவர்த்தனை நடந்துள்ளது என அமலாக்கத் துறையினர் விசாரித்து வருகின்றனர். மேலும் பூஜாவின் சகோதரர்கள் பெயர்களிலும் பணபரிவர்த்தனை நடந்துள்ளது.
பூஜாவின் செல்போனை அமலாக்கத் துறையினர் ஒரு முக்கிய சாட்சியாக சேர்த்துள்ளனர். ஆளுங்கட்சிக்கு நெருக்கமான ஐஏஎஸ் அலுவலரான பூஜா மீது ஊழல் வழக்கு போடப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த விசாரணை மூலம் மேலும் பெரும்புள்ளிகள் சிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க:விசாரணை வளையத்துக்குள் ஐஏஎஸ் பூஜா சிங்ஹால்!