மும்பை: பாஜக பிரமுகர் மோகித் கம்போஜ்-பாரதியா கார் மீது நேற்று (பிப்.22) இரவு கும்பல் ஒன்று தாக்குதல் நடத்தியுள்ளது. இந்தச் சம்பவம் பாந்த்ரா கிழக்கில் உள்ள மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவின் இல்லம் அருகே நடந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து, மோகித் கம்போஜ் கூறுகையில், "நேற்றிரவு திருமணத்திற்கு சென்று வீடு திரும்பி கொண்டிருந்தேன். அப்போது, கலாநகர் சந்திப்பு அருகே சென்றபோது, திடீரென 200 பேர் என் காரை சூழ்ந்து கொண்டு, தாக்குதலில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த காவல்துறையினர் கும்பலை அப்புறப்படுத்தி, என்னை மீட்டனர். இந்த தாக்குதலுக்குப் பின்னணியில் சிவசேனா உள்ளது" எனக் குற்றஞ்சாட்டினார்.
இதையடுத்து இன்று (பிப். 23) பாஜகவினர், மகாராஷ்டிரா அரசு இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தினர். சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் தேவேந்திர ஃபட்னாவிஸ் மற்றும் பிரவின் தரேகர் ஆகியோர் இச்சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: Kunwar Singh Birth Anniversary: பாகிஸ்தானின் சாதனையை முறியடிக்க தயாராகும் பீகார் - அமித் ஷா வருகை!