புதுச்சேரி மாநிலத்திலுள்ள பொதுப்பணித்துறை கட்டடங்கள், நெடுஞ்சாலையின் நடுவே உள்ள தடுப்புச்சுவர் ஆகியவற்றில் அழகிய வண்ணமலர் சோலை அமைக்கும் பணிகள் உப்பனாற்று பாலம் முதல் தொடங்கி இந்திராகாந்தி சதுக்கம் வரை மேற்கொள்ளப்படவுள்ளன.
இதில், சுமார் 9ஆயிரம் போகன்வில்லா செடிகள் நடப்படவுள்ளன. அதன் தொடக்கமாக இன்று (ஆகஸ்ட் 03) நியூடோன் திரையரங்கு பாலத்தின் அருகே செடி நடும் நிகழ்வு நடைபெற்றது.
இதில், கலந்துகொண்ட உருளையன்பேட்டை சட்டப்பேரவை உறுப்பினர் நேரு செடிகளை நட்டு அப்பணியை ஆரம்பித்து வைத்தார்.
இந்த நிகழ்வில் அரசு அலுவலர்கள், பொதுமக்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: நெல்லையில் கலையிழந்த ஆடிப் பெருக்கு விழா