பெங்களூரு: பெகூர் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட சவுடேஸ்வரி லே அவுட்டில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் சன்னவீரசுவாமி, யமுனா என்கிற சந்திரகலா (35) தம்பதி வசித்தனர். இவர்களுக்கு ரத்தன்யா(4) என்ற மகள் உள்ளார். நேற்று(அக்.6) அடையாளம் தெரியாத நபர்கள் தாயையும், மகளையும் கழுத்தை அறுத்துக் கொலை செய்துள்ளனர்.
ரத்த வெள்ளத்தில் தாயும், மகளும்
இந்நிலையில் நேற்று (அக்.6) சந்திரகலாவின் சகோதரி வீட்டிற்குச் சென்று பார்த்தபோது, யமுனாவும், மகள் ரத்தன்யாவும் (4) கழுத்தை அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு, ரத்த வெள்ளத்தில் உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளனர்.
சித்ரதுர்கா மாவட்டத்தைச் சேர்ந்த சந்திரகலாவின் குடும்பம், நான்கு ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூருவுக்குக் குடிபெயர்ந்துள்ளது. சந்திரகலா ஆன்லைன் மூலம் ஆயுர்வேத பொருள்கள் விற்பனை செய்யும் வேலை செய்து வந்துள்ளார்.
காவல் துறை விசாரணை
இதுகுறித்து காவல் துறையினர் கூறுகையில், "சந்திரகலாவின் கணவர் சன்னவீரசுவாமி காலை வேலைக்குச் சென்ற பிறகு, அடையாளம் தெரியாத நபர்கள் அவரது வீட்டிற்குள் நுழைந்து பின்னர் பிற்பகலில் வீட்டை விட்டு வெளியேறியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உள்ளே சென்ற அவர்கள், சந்திரகலாவையும் அவரது மகளையும் கத்தியால் குத்தி கழுத்தை அறுத்துள்ளனர். பின்னர் அங்கிருந்த தங்க நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இதுகுறித்து கூடுதல் கமிஷனர் முருகன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டார்" என தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: கைமாறிய 1,100 கிலோ தங்கம்- சிக்கிய ஸ்ரீ கிருஷ்ணா ஜூவல்லரி!