கான்பூர்: உத்தரப் பிரதேசம் மாநிலம் கான்பூர் மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றில், கடந்த சில தினங்களுக்கு முன், சிறுமி ஒருவர் கடத்தப்பட்டார். அச்சிறுமியின் பெற்றோர், உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் சிறுமியை கண்டுபிடிப்பதில் சிரமம் ஏற்பட்டது.
இந்நிலையில், இன்று (நவம்பர் 15) காலை விளை நிலத்துக்குச் சென்ற அக்கிராமத்தைச் சேர்ந்த சிலர், அங்குள்ள காளி கோயில் அருகே சிறுமியின் உடல் இருந்ததை பார்த்தனர். உடல் உறுப்புகள் நீக்கப்பட்ட நிலையில், சிறுமியின் உடலை கண்டு அதிர்ச்சி அடைந்த கிராமத்தினர், அருகே உள்ள காவல் நிலையில் புகார் அளித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், சிறுமியின் உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு உடற்கூறாய்விற்காக அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து வழக்குப் பதிவு செய்து, குற்றவாளி தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அடையாளம் தெரியாத நபரால் கடத்தப்பட்ட சிறுமி, நரபலி கொடுக்கப்பட்டிருக்கலாம் என தெரிவித்துள்ள அக்கிராம மக்கள், குற்றவாளிக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
இதையும் படிங்க: