ETV Bharat / bharat

'போராடும் விவசாயிகள் குறித்து அவதூறு பரப்பும் மத்திய அமைச்சர்கள் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்' - விவசாயிகள் (அதிகாரம் மற்றும் பாதுகாப்பு அளித்தல்) விலை உத்தரவாதம் மற்றும் பண்ணை சேவைகள் சட்டம் 2020

அமிர்தசரஸ் : மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடும் விவசாயிகளை காலிஸ்தான் அமைப்பைச் சேர்ந்தவர்கள் என அடையாளப்படுத்திய மத்திய அமைச்சர்கள் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என சிரோன்மணி அகாலி தளம் (எஸ்.ஏ.டி.) தலைவர் சுக்பிர் சிங் பாதல் வலியுறுத்தியுள்ளார்.

சிரோமணி அகாலி தளம் தலைவர் சுக்பிர் சிங் பாதல்

author img

By

Published : Dec 12, 2020, 10:40 PM IST

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களான அத்தியாவசிய பொருள்கள் (திருத்த) சட்டம் 2020, உழவர் உற்பத்தி வர்த்தக (ஊக்குவிப்பு மற்றும் வசதி) சட்டம் 2020, விவசாயிகள் (அதிகாரம் மற்றும் பாதுகாப்பு அளித்தல்) விலை உத்தரவாதம் மற்றும் பண்ணை சேவைகள் சட்டம் 2020 ஆகிய மூன்றையும் எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்கள் வெடிக்கத் தொடங்கியுள்ளன.

பஞ்சாப், ஹரியானா, குஜராத், மகாராஷ்டிரா, சத்தீஸ்கர் உள்ளிட்ட 8 மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் இந்த வேளாண் சட்டங்களை எதிர்த்து செப்டம்பர் மாதத்திலிருந்து போராட்டங்களை நடத்திவருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக, பாரதிய கிசான் யூனியன் உள்ளிட்ட 32 விவசாய அமைப்புகளின் கூட்டமைப்பான கிசான் மஜ்தூர் சங்கர்ஷ் குழு ‘டெல்லி சலோ’ என்ற பெயரில் தலைநகரை முற்றுகையிட்டுப் போராட்டத்தை முன்னெடுத்துவருகிறது. கடந்த நவ. 26ஆம் தேதி தொடங்கிய இந்தப் போராட்டம் டெல்லி புராரி பகுதியில் 17 நாள்களாகத் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர மத்திய அரசுக்கும், விவசாயிகள் தூதுக்குழுவிற்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இருப்பினும், அந்த பேச்சுவார்த்தையில் தீர்வை இன்றுவரை எட்ட முடியவில்லை.

தொடர்ந்து போராட்டங்கள் அதிகரித்துவருவதால், நாடு முழுவதும் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாது அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, ஐரோப்பா உள்ளிட்ட உலகின் பல்வேறு பகுதிகளிலும் விவசாயிகளுக்கு ஆதரவான போராட்டங்கள் நடைபெற்றுவருவதால் இந்திய அரசின் மீதான அழுத்தம் அதிகரித்து வருகிறது.

இதன் காரணமாக டெல்லியில் நடைபெற்றுவரும் விவசாயிகள் போராட்டத்தை பாஜக மூத்த தலைவர்கள், அமைச்சர்கள் கடுமையாக விமர்சித்துவருகின்றனர். இந்த போராட்டத்தை மத்திய அரசுக்கு எதிராக வழிநடத்த காலிஸ்தான் அமைப்பும், மாவோயிஸ்ட் அமைப்பும் முயல்கிறது என்றும் பாகிஸ்தான் உன்னிப்பாகக் கவனித்து வருகிறது என்றும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.

பாஜக தலைவர்களின் இந்த கருத்திற்கு நாடு முழுவதும் உள்ள எதிர்க்கட்சிகள், விவசாயிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. அந்த வகையில், புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறிய சிரோன்மணி அகாலி தளம் (எஸ்.ஏ.டி.) வன்மையாக கண்டித்துள்ளது.

இது தொடர்பாக நமது ஈடிவி பாரத்திடம் பேசிய அக்கட்சி தலைவர் சுக்பிர் சிங் பாதல், “விவசாயிகள் போராட்டத்தை காலிஸ்தான் பிரிவினைவாதிகளும் மாவோயிஸ்ட்களும் வழிநடத்துகின்றனர் என்றும் போராடுவோர் அனைவரும் தேச விரோதிகள் என்றும் மத்திய அரசும், பாஜக தலைவர்களும் அவதூறு செய்ய முயற்சிக்கின்றனர். இதுபோன்ற அறிக்கைகளை வெளியிடும் அமைச்சர்கள் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்.

போராடும் விவசாயிகளை மத்திய அரசு கையாளும் அணுகுமுறையையும், போராட்டத்தைக் கொச்சைப்படுத்தும் பாஜக தலைவர்களின் அறிக்கைகளையும் நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். விவசாயிகளின் குரல்களைக் கேட்பதற்குப் பதிலாக அவற்றைக் கட்டுப்படுத்த மத்திய அரசு முயற்சிப்பது துரதிர்ஷ்டவசமானது. விவசாயிகள், இந்த புதிய வேளாண் விவசாய சட்டங்களை விரும்பவில்லை. யாருக்காக சட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன? அதை அந்த சமூகமே விரும்பாதபோது, ​​மத்திய அரசு ஏன் கொடுங்கோன்மையைக் காட்டுகிறது? விவசாயிகளுக்கு செவிசாய்க்குமாறு பிரதமரிடம் கேட்டுக்கொள்கிறேன்.

சிரோமணி அகாலி தளம் தலைவர் சுக்பிர் சிங் பாதல்
சிரோமணி அகாலி தளம் தலைவர் சுக்பிர் சிங் பாதல்

இரவுகளை கடுமையான குளிரில் வீதிகளில் கழிக்கும் விவசாயிகள் யாரும் மகிழ்ச்சியாக இல்லை. மத்திய அரசின் கொள்கைகளுக்கு எதிராக குரல் எழுப்பும் அனைவரையும் தேச விரோதிகள் என்று அழைத்து, அவதூறு செய்வதை உடனடியாக நிறுத்த வேண்டும்” என்றார்.

டெல்லியில் போராடிவரும் விவசாயிகளுக்கு ஆதரவாக சாகித்ய அகாடமி விருது பெற்ற சிர்மோர் ஷைர் டாக்டர் மோகன்ஜித், பிரபல சிந்தனையாளர் டாக்டர் ஜஸ்விந்தர் சிங், நாடக ஆசிரியர் திரிபூன் ஸ்வராஜ்பீர் உள்ளிட்ட பிரபலங்கள் தங்களது தேசிய விருதுகளைத் திருப்பி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : ‘உணவை வீணாக்காதீர்’ - நாள்தோறும் 2,000 வறியவர்களுக்கு உணவளிக்கும் பி.டெக். பட்டதாரி இளைஞரின் வேண்டுகோள்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.