ETV Bharat / bharat

மக்களின் நம்பிக்கையைப் பெற அமைச்சர்களுக்கு தடுப்பூசி போடவேண்டும் - நாரயணசாமி - தடுப்பூசி மீது மக்களுக்கு நம்பிக்கை

புதுச்சேரி: முதலமைச்சர், அமைச்சர்கள் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு முதற்கட்ட தடுப்பூசியை போட்டால்தான் தடுப்பூசி மீது மக்களுக்கு நம்பிக்கை வரும் என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

Ministers should be vaccinated to gain the trust of the people - Narayanasamy

author img

By

Published : Jan 12, 2021, 3:55 PM IST

Updated : Jan 12, 2021, 4:51 PM IST

புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்," புதுச்சேரி மற்றும் காரைக்காலில் தடுப்பூசி போடும் மையங்கள் தயார் செய்யப்பட்டுள்ளது. முதல்கட்டமாக சுமார் 14 ஆயிரம் நபர்களுக்கு தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பிரதமருடன் நேற்று நடைபெற்ற முதலமைச்சர்கள் கூட்டத்தில் மேற்குவங்கம் முதலமைச்சரும், நானும் தடுப்பூசிக்கு என்ன உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது, பக்கவிளைவுகள் ஏதேனும் ஏற்படுமா என கேள்வி எழுப்பினோம். மக்கள் மத்தியில் தடுப்பூசி போட்டுக்கொள்வதில் நம்பிக்கை இருக்க வேண்டும்.

தடுப்பூசி குறித்த அச்சம் மக்களுக்கு இருக்கக்கூடாது. ஆகவே அரசியல் கட்சியினர், முதலமைச்சர், அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு முதல்கட்ட தடுப்பூசி போட வேண்டும். இதனால் மக்களுக்கும் தடுப்பூசி மீது நம்பிக்கை வரும். இது தொடர்பாக பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளேன்.

தடுப்பூசி அனைத்து மக்களுக்கும் இலவசமாக கொடுப்பார்களா எனத் தெரியவில்லை. மத்திய அரசு இலவசமாக அளித்தாலும் அளிக்காவிட்டாலும் மாநில அரசு முழுமையான செலவை ஏற்றுக்கொண்டு அரசின் நிதியிலிருந்து மக்களுக்கு தடுப்பூசியினை அளிக்கும்.

புதுச்சேரியில் மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக துணை ராணுவப் படையினர் வரவழைக்கப்பட்டுள்ளனர். புதுச்சேரி சட்டப்பேரவை வளாகம், கடற்கரை சாலை உள்ளிட்ட பகுதிகளில் போடப்பட்டுள்ள தடுப்புகளையும் தடைகளையும் உடனடியாக அலுவலர்கள் நீக்க வேண்டும். இல்லையெனில் பேரிடர் மீட்புத் துறை தலைவர் என்ற அடிப்படையில் தடைகளை நீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி

மின்துறை ஊழியர்கள் அறிவித்துள்ள போராட்டத்தை திரும்பப் பெற வேண்டும். போராட்டம் நடைபெற்றால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுவர்” என்றார்.

இதையும் படிங்க: ’புதுச்சேரிக்கு ஆளுநர் பதவியே தேவையில்லை’ - திருமாவளவன்

Last Updated : Jan 12, 2021, 4:51 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.