அவர்கள் தங்களின் கடமையை மறந்து மக்களை பகடைக்காயாக ஆக்கியதன் விளைவாக, புதுச்சேரி கரோனாவில் பலிகாடாக்கப்பட்டு வருகின்றனர் என குற்றஞ்சாட்டினார்.
மேலும், ஆட்சியாளர்கள், மருத்துவத்துறை, காவல்துறை அலுவலர்கள் மக்களை பற்றி கவலைப்படாமல் ஏனாதானோ என்று செயல்பட்டு வருகின்றனர் என்றார்.
தொடர்ந்து, முன்பதிவு செய்துவிட்டு மருத்துவத்துக்கு வர வேண்டும் என்று ஜிப்மர் நிர்வாகம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. டெலிமெடிசின் என்ற போர்வையில் மருத்துவர்களிடம் பேசி மருத்துவம் பாருங்கள் என்கின்றனர்.
கிராமப்புறங்களில் இருக்கும் மக்களுக்கு முன்பதிவு செய்வது என்பதும் தெரியாது என்றும், ஜிப்மர் நிர்வாகம் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டும் தான் சிகிச்சை அளிப்போம் என்று உத்தரவிட்டது ஏமாற்று வேலை 100, 500 கிலோ மீட்டர் தூரத்திலிருந்து மக்கள் ஜிப்மருக்கு வருகின்றனர்.
ஆனால், அதனை விட்டுவிட்டு முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டும் சிகிச்சை என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது என்று கூறிய நாராயணசாமி, ஜிப்மர் மருத்துவமனையில் புதுச்சேரி மாநில நோயாளிகள் புறக்கணிக்கப்படுவதாக தகவல் வருவதாகவும், பேரிடர் காலத்தில் மருத்துவம் பார்க்க வேண்டியதுதான் தரமான மருத்துவமனையின் வேலை.
அதனை தட்டிக்கழித்துவிட்டு, கரோனாவை காரணம் காட்டி ஜிப்மர் நிர்வாகம் தனது கடமையிலிருந்து தவறக்கூடாது என்றும், மருத்துவமனைக்கு வருகின்ற அனைத்து நோயாளிகளுக்கும் மருத்துவம் பார்க்க வேண்டும் என்றும், ஜிப்மர் மருத்துவமனை அனைவருக்கும் மருத்துவம் பார்க்க வேண்டும்” என வலியுறுத்தி மத்திய சுகாதாரத்துறை அமைச்சருக்கு கடிதம் எழுத உள்ளதாக முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் 100 விமானங்கள் குறைக்கப்பட்டன!