ETV Bharat / bharat

Jammu Kashmir Encounter: பயங்கரவாதி சுட்டுக்கொலை; ராணுவ வீரர் காயம் - துப்பாக்கிச்சூட்டில் ராணுவ வீரர் காயம்

ஜம்மு காஷ்மீர் மாநிலம் குல்காமில் நடந்த என்கவுன்ட்டரில் ஒரு பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டதாகவும், இந்த தாக்குதலில் ராணுவ வீரர் ஒருவர் காயம் அடைந்து உள்ளதாகவும் கூறப்படுகிறது.

Militant killed in encounter in Jammu and Kashmir Kulgam

author img

By

Published : Jun 27, 2023, 10:18 AM IST

ஸ்ரீநகர் (ஜம்மு காஷ்மீர்): ஜம்மு காஷ்மீர் மாநிலம், குல்காம் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை அதிகாலை பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்ட்டரில் அடையாளம் தெரியாத பயங்கரவாதி கொல்லப்பட்டதாகப் போலீசார் தெரிவித்து உள்ளனர். இந்தச் சம்பவத்தில் பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் காயமடைந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.

இது குறித்து காஷ்மீர் மண்டல காவல்துறை அதன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு உள்ளது. அந்தப் பதிவில், “குல்காம் மாவட்டத்தின் ஹூரா கிராமத்தில் என்கவுன்ட்டர் தொடங்கியுள்ளது. காவல்துறை மற்றும் பாதுகாப்புப் படையினர் பணியில் உள்ளனர். ஒரு ஜேகேபி வீரர் காயமடைந்தார். நடவடிக்கை நடந்து வருகிறது” எனத் தெரிவித்து உள்ளது.

மேலும் இதுகுறித்து காஷ்மீர் மண்டல காவல்துறையின் பதிவிட்டு உள்ள மற்றொரு ட்விட்டர் பதிவில், “ஒரு பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டார். அவரது அடையாளம் மற்றும் தகவல்கள் கண்டறியப்படுகிறது. சுட்டுக் கொல்லப்பட்ட நபரிடம் இருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் பொருட்கள் மீட்கப்பட்டு உள்ளன. மேற்கொண்டு விசாரணை நடந்து வருகிறது” என்று காஷ்மீர் மண்டல காவல்துறை தெரிவித்து உள்ளது.

வடக்கு காஷ்மீரின் எல்லை மாவட்டமான குப்வாராவின் மச்சில் பகுதியில் எல்லைப் பகுதி வழியாக நடந்த ஊடுருவல் முயற்சியின் போது நான்கு அடையாளம் தெரியாத பயங்கரவாதிகளைக் கொன்றதாக ஜம்மு காஷ்மீர் காவல்துறை கூறிய சில நாட்களுக்குப் பிறகு இந்த துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது.

இதுகுறித்து காவல் துறை செய்தித் தொடர்பாளர், “ஒரு கூட்டு நடவடிக்கையில், குப்வாராவில் உள்ள மச்சல் செக்டாரின் காலா ஜங்கிள் பகுதியில் ஊடுருவ முயன்ற நான்கு பயங்கரவாதிகளை ராணுவமும், காவல்துறையும் இணைந்து தாக்குதல் நடத்தி சுட்டுக் கொன்றனர்” என்று தெரிவித்து இருந்தார்.

  • By targeting innocent civilians including women & kids, unarmed policemen & outside labourers, terrorists can’t deter our efforts to bring peace in valley. Our CT operations will continue simultaneously in all 3 regions of Kashmir specially against foreign terrorists: IGP Kashmir

    — Kashmir Zone Police (@KashmirPolice) June 19, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

முன்னதாக ஜூன் 1ஆம் தேதி, வடக்கு காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள க்ரீரி பகுதியில் இரண்டு லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத கூட்டாளிகளைக் கைது செய்ததாகவும், அவர்களிடம் இருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை கைப்பற்றியதாகவும் காவல்துறை கூறியது.

இதுகுறித்து காவல்துறை செய்தித் தொடர்பாளர், “க்ரீரி பாரமுல்லாவின் வார்போரா பகுதியில் அமைக்கப்பட்ட சோதனைச் சாவடியில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர்” எனத் தெரிவித்து இருந்தார். பாரமுல்லா காவல்துறையும் ராணுவமும் இணைந்து நடத்திய நாகா சோதனையின் போது, சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிய இருவர் கைது செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்டவர்கள் விசாரணைக்காக காவலில் வைக்கப்பட்டு உள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இதையும் படிங்க: Vande Bharat: போபாலில் இருந்து 5 புதிய வந்தே பாரத் ரயில்களின் சேவை இன்று தொடக்கம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.