ETV Bharat / bharat

அஸ்ஸாமில் பயங்கரவாதி கைது; துப்பாக்கி, வெடிபொருள்கள் பறிமுதல்!

author img

By

Published : Nov 27, 2020, 11:40 AM IST

அஸ்ஸாம் மாநிலத்தில் பயங்கரவாதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து துப்பாக்கி, வெடிபொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

Militant arrested in Assam; pistol ammunition seized Militant அஸ்ஸாம் பயங்கரவாதி நோங்மே துங்ஜாங் சஞ்ஜிப் பாங்சோ

திபு: அஸ்ஸாம் மாநிலத்தில் கைதான பயங்கரவாதியிடம் தீவிர விசாரணை நடந்துவருகிறது.

கர்பி லோங்ரி பொதுமக்கள் ஜனநாயக கவுன்சில் அமைப்பில் தன்னைத்தானே பொதுச் செயலாளராக அறிவித்துக்கொண்டு செயல்படும், நோங்மே துங்ஜாங் என்ற சஞ்ஜிப் பாங்சோ குறித்து காவல்துறைக்கு உளவுத்தகவல் கிடைத்தது.

இந்தத் தகவலின்பேரில் காவலர்கள் அஸ்ஸாம், கர்பி அங்லாங் மாவட்டத்தில் தீவிர சோதனை நடத்தினார்கள்.

அப்போது காவலர்களிடம் நோங்மே துங்ஜாங் என்ற சஞ்ஜிப் பாங்சோ சிக்கினார். இவரின் கைது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபஜித் தியோரி கூறுகையில், “நோங்மே துங்ஜாங் என்ற சஞ்ஜிப் பாங்சோ பகலியா காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கைதுசெய்யப்பட்டார்.

அவரிடமிருந்து 7.65மிமீ கைத்துப்பாக்கி, இரண்டு செல்போன்கள், வெடிப்பொருள்கள் மற்றும் அவர் சார்ந்த இயக்கம் தொடர்பான புத்தகங்கள் சார்ந்த பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. காவலர்கள் பாதுகாப்பு பணிகளை முடுக்கிவிடப்பட்டுள்ளது” என்றார்.

இதையும் படிங்க: பயணிகள் மீது துப்பாக்கிச் சூடு: பேருந்தில் இருந்த 34 பேர் உயிரிழந்த பரிதாபம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.