ETV Bharat / bharat

மும்பை கேட்வே நினைவுச் சின்னத்தில் விரிசல்! - மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி

வரலாற்றுச் சிறப்புமிக்க மும்பை கேட்வே நினைவுச் சின்னத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக தொல்லியல்துறை தணிக்கையில் கண்டறியப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஆய்வு செய்து, நினைவுச் சின்னத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தெரிவித்துள்ளார்.

Gateway
Gateway
author img

By

Published : Mar 9, 2023, 8:17 PM IST

மும்பை: இந்தியாவின் நுழைவுவாயில் என்று அழைக்கப்படும் கேட்வே ஆஃப் இந்தியா நினைவுச் சின்னம், வரலாற்றுச் சிறப்புமிக்க நினைவுச் சின்னமாகவும், மும்பையின் முக்கிய அடையாளமாகவும் விளங்குகிறது. பழமையான இந்த கட்டிடத்தை இந்திய தொல்லியல் துறை பராமரித்து வருகிறது.

மும்பை கேட்வே நினைவுச் சின்னத்தின் கட்டுமானத்தை தொல்லியல் துறையினர் அண்மையில் தணிக்கை செய்தனர். இந்த தணிக்கை தொடர்பாக அறிக்கை மகாராஷ்ட்ரா மாநில அரசிடம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், மும்பை கேட்வே கட்டிடத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்டிடத்தின் குவிமாடத்தில் கான்கிரீட் பூச்சுகள் சேதமடைந்து உள்ளதாகவும், விரிசல்களில் தாவரங்கள் வளர்ந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டு உள்ளது. அண்மையில் ஏற்பட்ட புயலின் போது கட்டிடத்தின் ஓரத்தில் இருந்த தடுப்பு சுவர் இடிந்து விழுந்தாகவும், அது தற்காலிகமாகவே சீரமைக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மும்பே கேட்வே பகுதியில் நேற்று (மார்ச்.8) மகளிர் தின விழா நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி, மகாராஷ்ட்ரா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே, மகாராஷ்ட்ரா துணை முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது, மும்பை கேட்வே கட்டிடத்தில் லைட் ஷோ நடைபெற்றது.

இதில் டிஜிட்டல் லைட் எஃபெக்ட்ஸில், மராட்டியப் பேரரசின் புகழ் பெற்ற வரலாற்றையும், சத்ரபதி சிவாஜியின் வீரத்தையும் எடுத்துரைக்கும் வகையில் ஒளிப்படங்கள் காட்சிபடுத்தப்பட்டன. இந்த லைட் ஷோ தினமும் இரவு 8 மணிக்கு நடத்தப்படும் என்றும், மும்பைவாசிகள் மற்றும் மும்பைக்கு வருபவர்கள் கண்டிப்பாக இதனை கண்டுகளிக்க வேண்டும் என்றும் மகாராஷ்ட்ரா அரசு தெரிவித்தது.

இந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரியிடம், மும்பை கேட்வே கட்டிடம் சேதமடைந்துள்ளதாக அறிக்கை அளிக்கப்பட்டது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த புரி, கட்டிடத்தில் ஏதேனும் சேதம் இருந்தால், மத்திய மாநில அரசின் சம்பந்தப்பட்ட துறைகள் அதனை ஆய்வு செய்து, இந்த வரலாற்று சிறப்புமிக்க கட்டிடத்தை சீரமைக்கும் என்று தெரிவித்தார். இதுபோன்ற நினைவுச் சின்னங்களை பாதுகாப்பது தங்களது கடமை என்றும் அவர் கூறினார்.

கேட்வே ஆஃப் இந்தியா நினைவுச் சின்னம் பிரிட்டிஷ் ஆட்சியில் கட்டப்பட்டது. மும்பையில் அரபிக் கடலோரத்தில் அமைந்துள்ள இது, மும்பை நகரத்தின் முதன்மையான சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக திகழ்கிறது. வணிகம் செய்வதற்காக இந்தியாவுக்கு வந்த பிரிட்டன் மன்னர் ஐந்தாம் ஜார்ஜின் நினைவாக இது கட்டப்பட்டது.

இந்த கட்டிடம் 1911ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டு, 1924ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. ஜார்ஜ் விட்டர் என்பவர் இந்த கட்டிடத்தை வடிவமைத்தார். பிரிட்டன் மன்னர்களும், இந்திய ஆளுநர்களும் இந்த நினைவு வளைவு வழியாக அலங்காரமாக வரவேற்கப்பட்டனர். நூற்றாண்டு பழமையான இந்த கட்டிடம் மழை, புயல், வெயில், குளிர், கடலலைகள் என அனைத்து இயற்கை பேரிடர்களையும் தாங்கி நிற்கிறது.

இதையும் படிங்க: தங்கக் கடத்தலில் ஈடுபட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஊழியர் சஸ்பெண்ட்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.