ஐதராபாத்: ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் முன்னணி நட்சத்திரங்களான கத்ரீனா கைஃப் மற்றும் விஜய் சேதுபதி நடித்து, வெளியாக உள்ள 'மேரி கிறிஸ்துமஸ்' படம் முன்கூட்டியே வெளியிடப்படவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.இப்படம் டிசம்பர் 23 ஆம் தேதி வெளியாக இருந்த நிலையில், பின் டிசம்பர் 15-க்கு மாற்றப்பட்டது.
தமிழ் மற்றும் இந்தி ஆகிய இரண்டு மொழிகளில் இந்த ஆண்டு டிசம்பர் 15 ஆம் தேதி இப்படம் வெளியாக இருந்த நிலையில் ஒரு வாரம் முன்னதாகவே டிசம்பர் 8 ஆம் தேதி வெளியாக உள்ளது. இது குறித்து வர்த்தக ஆய்வாளர் தரண் ஆதர்ஷ் இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்பை ஏற்படுத்தியுள்ள சித்தார்த் மல்ஹோத்ராவின் 'யோதா' திரைப்படமும் அதே தேதியில் வெளியாக இருந்தது. இந்த மோதலை தடுக்கவே தேதி மாற்றப்பட்டது. இருப்பினும், யோதா பட தயாரிப்பாளர்களும் பட வெளியீட்டு தேதியை மாற்றியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
KATRINA KAIF - VIJAY SETHUPATHI: ‘MERRY CHRISTMAS’ TO ARRIVE ONE WEEK EARLY... 8 Dec 2023 is the new release date of #MerryChristmas, which teams #KatrinaKaif and #VijaySethupathi for the first time.#MerryChristmas - directed by #SriramRaghavan - is shot in two languages… pic.twitter.com/GPyGmCIQMI
— taran adarsh (@taran_adarsh) October 3, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">KATRINA KAIF - VIJAY SETHUPATHI: ‘MERRY CHRISTMAS’ TO ARRIVE ONE WEEK EARLY... 8 Dec 2023 is the new release date of #MerryChristmas, which teams #KatrinaKaif and #VijaySethupathi for the first time.#MerryChristmas - directed by #SriramRaghavan - is shot in two languages… pic.twitter.com/GPyGmCIQMI
— taran adarsh (@taran_adarsh) October 3, 2023KATRINA KAIF - VIJAY SETHUPATHI: ‘MERRY CHRISTMAS’ TO ARRIVE ONE WEEK EARLY... 8 Dec 2023 is the new release date of #MerryChristmas, which teams #KatrinaKaif and #VijaySethupathi for the first time.#MerryChristmas - directed by #SriramRaghavan - is shot in two languages… pic.twitter.com/GPyGmCIQMI
— taran adarsh (@taran_adarsh) October 3, 2023
டிசம்பர் 8 ஆம் தேதி முக்கியமான இந்தி படம் ஏதும் திட்டமிடப்படாத நிலையில் ’மேரி கிறிஸ்துமஸ்’ மற்றும் ’யோதா’ படம் சாதகமான சூழலை ஏற்படுத்தும் என்பதற்காகவே முன்னதாகவே வெளியிடப்படுகிறது.
இதையும் படிங்க: ஜெயிலரின் மாஸ் வெற்றி குறித்து ரஜினிகாந்த் பேட்டி!
டிசம்பர் 1-ஆம் தேதி வெளியாகும், ரன்பீர் கபூரின் 'அனிமல்' திரைப்படமும், விக்கி கௌஷல் நடித்த 'சாம் பகதூர்' திரைப்படமும் மேரி கிறிஸ்துமஸ் படத்திற்கு போட்டியாக அமையும் என்று கூறப்படுகிறது. இருப்பினும், கத்ரீனா கைஃப் மற்றும் விஜய் சேதுபதி ஆகிய முக்கிய நட்சத்திரங்கள் இந்த படத்தில் நடித்துள்ளதால், இப்படம் பார்வையாளர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை பெற்றுள்ளது.
ரமேஷ் தௌராணி, ஜெயா டௌராணி, சஞ்சய் ரௌத்ரே மற்றும் கேவல் கர்க் ஆகியோரால் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்தி மற்றும் தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் தனித்துவமான துணை நடிகர்கள் நடத்துள்ளது இப்படத்தின் முக்கிய அம்சமாக அமைந்துள்ளது. இந்தியில், சஞ்சய் கபூர், வினய் பதக், பிரதிமா கண்ணன், மற்றும் டின்னு ஆனந்த் போன்ற முன்னணி நடிகர்கள் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
-
SIDHARTH MALHOTRA: 'YODHA' RELEASE ADVANCED BY ONE WEEK... #Yodha - starring #SidharthMalhotra, #DishaPatani and #RaashiiKhanna - will now arrive in *cinemas* on 8 Dec 2023… Directed by #SagarAmbre and #PushkarOjha.
— taran adarsh (@taran_adarsh) October 3, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
Produced by #HirooYashJohar, #KaranJohar, #ApoorvaMehta and… pic.twitter.com/atkz8J1QAw
">SIDHARTH MALHOTRA: 'YODHA' RELEASE ADVANCED BY ONE WEEK... #Yodha - starring #SidharthMalhotra, #DishaPatani and #RaashiiKhanna - will now arrive in *cinemas* on 8 Dec 2023… Directed by #SagarAmbre and #PushkarOjha.
— taran adarsh (@taran_adarsh) October 3, 2023
Produced by #HirooYashJohar, #KaranJohar, #ApoorvaMehta and… pic.twitter.com/atkz8J1QAwSIDHARTH MALHOTRA: 'YODHA' RELEASE ADVANCED BY ONE WEEK... #Yodha - starring #SidharthMalhotra, #DishaPatani and #RaashiiKhanna - will now arrive in *cinemas* on 8 Dec 2023… Directed by #SagarAmbre and #PushkarOjha.
— taran adarsh (@taran_adarsh) October 3, 2023
Produced by #HirooYashJohar, #KaranJohar, #ApoorvaMehta and… pic.twitter.com/atkz8J1QAw
இதற்கு நேர்மாறாக, தமிழில் ராதிகா சரத்குமார், சண்முகராஜா, கெவின் ஜெய் பாபு, மற்றும் ராஜேஷ் வில்லியம்ஸ் உள்ளிட்ட நடிகர்கள், சமமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அஸ்வினி கல்சேகர் மற்றும் ராதிகா ஆப்தே ஆகியோர் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது.
யோதா படத்தை கரண் ஜோஹரின் தர்மா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. சித்தார்த் ஒருபுறம் இருக்க, இப்படத்தில் திஷா பதானி மற்றும் ராஷி கண்ணா ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
இதையும் படிங்க: தங்க உடையில் தேவதையாக மின்னும் ஐஸ்வர்யா ராய்!