கட்டாக்: 15-ஆவது ஆடவருக்கான உலகக்கோப்பை ஹாக்கிப் போட்டி ஒடிசா மாநிலம் கட்டாக் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தியா தொடர்ந்து இரண்டாவது முறையாக ஹாக்கி உலகக்கோப்பையை நடத்துகிறது. இஇத்தொடரில் 44 போட்டிகள் நடைபெறவுள்ளன.
கட்டாக் நகரில் புதன்கிழமை நடைபெற்ற தொடக்க விழா நிகழ்ச்சியில் இந்தியாவின் கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும் வகையில் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் நடிகர் ரன்வீர்சிங், திஷா பதானி ஆகியோர் நடனமாடி அசத்தினர்.
நிகழ்ச்சியில் மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாகூர், ஒடிசா முதல்வா் நவீன் பட்நாயக், சர்வதேச ஹாக்கி சம்மேளன தலைவர் தயாப் இக்ரம், ஹாக்கி இந்தியா தலைவர் திலிப் திா்கி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதையும் படிங்க: இந்த 2 இருமல் மருந்துகளை பயன்படுத்த வேண்டாம்: உலக சுகாதார அமைப்பு