ராமநகரா (கர்நாடகா) : முன்னாள் முதலமைச்சர் சித்த ராமையா, காங்கிரஸ் மாநிலத் தலைவர் டி.கே. சிவக்குமார் உள்பட காங்கிரஸ் பிரமுகர்கள் 63 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்ட வலியுறுத்தி காங்கிரஸ் மாநிலத் தலைவர் டி.கே. சிவக்குமார் தலைமையில் பாதயாத்திரை ஊர்வலம் நடந்தது.
இந்தப் பாதயாத்திரை ஊர்வலத்தின்போது காங்கிரஸ் தலைவர்கள் கோவிட் கட்டுப்பாடுகளை மீறியதாக தொற்றுநோய் தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
முன்னதாக முன்னாள் முதலமைச்சர் சித்த ராமையா, டி.கே. சிவக்குமார் ஆகியோர் மீது ஏற்கனவே வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது மேலும் 25 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் 40 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
மேகதாது அணை கட்ட வலியுறுத்தி காங்கிரஸ் ஞாயிற்றுக்கிழமை (ஜன.9) பாதயாத்திரை ஊர்வலம் நடத்தியது. 139 கிமீ தூர பாதயாத்திரையை ஜன.19ஆம் தேதி நிறைவுற திட்டமிட்டிருந்தனர்.
இதற்கிடையில் மாநில அரசு கோவிட் பரவும் அச்சம் இருப்பதால் பாதயாத்திரையை நிறுத்தும்படி புதன்கிழமை (ஜன.12) உத்தரவிட்டது.
இதையும் படிங்க : மேகதாது அணை கட்டக்கோரி காங்கிரஸ் பாதயாத்திரை.. காய்ச்சலால் பாதியில் திரும்பிய முன்னாள் முதலமைச்சர்!