அனந்த்நாக் : ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் மெஹபூபா முக்தி கார் விபத்தில் நூலிழையில் உயிர் தப்பினார். ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சரும் ஜம்மு காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவருமான மெஹபூபா முக்தி ஜம்மு - ஸ்ரீநகர் இடையிலான தேசிய நெடுஞ்சாலையில் சங்கம் பகுதியில் தனது வாகனத்தில் சென்று உள்ளார்.
அப்போது எதிர்திசையில் வந்த டிரக் மீது மெஹபூபா முக்தி சென்ற வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக எந்த வித உயிர் காயங்களின்றி மெஹபூபா முக்தி உயிர் பிழைத்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மெஹபூபா முக்தி சென்ற வாகனத்தின் ஓட்டுநருக்கு மட்டும் கால் பகுதியில் லேசான காயம் ஏற்பட்டதாக கூறப்பட்டு உள்ளது.
கஹன்பால் அனந்த்நாக் பகுதியை நோக்கி பயணம் மேற்கொண்டு இருந்த நிலையில், மெஹபூபா முக்தியின் வாகனம் விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சரும், மக்கள் ஜனநாயக கட்சியின் நிறுவனருமான முப்தி முகமது சயீத்தின் மகளான மெஹபூபா முக்தி, தனது தந்தையின் மறைவுக்கு பின்னர் முதலமைச்சர் மற்றும் கட்சியின் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
இதையும் படிங்க : Budget Session 2024: நாடாளுமன்ற கூட்டம் ஜன.31ல் கூடுகிறது! இடைக்கால பட்ஜெட் எப்போது தாக்கல்?