ETV Bharat / bharat

6 மாத காலத்தில் ரூ.82 லட்சம் அரசின் பணத்தைச் செலவழித்த மெஹபூபா முப்தி - ஆர்.டி.ஐ. தகவல் - 82 லட்சம் ரூபாய் அரசின் பணத்தை செலவழித்துள்ள மெஹபூபா முப்தி

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் மெஹபூபா முப்தி 2018ஆம் ஆண்டு ஜனவரி முதல் ஜூன் வரையிலான ஆறு மாதங்களில் ஏறத்தாழ 82 லட்சம் ரூபாய் அரசின் பணத்தை செலவழித்துள்ளதாக ஆர்.டி.ஐ. தகவல் தெரிவித்துள்ளது.

ஆறு மாத காலத்தில் ரூ.82 லட்சம் அரசின் பணத்தை செலவழித்த மெஹபூபா முப்தி - ஆர்.டி.ஐ. தகவல்

author img

By

Published : Jan 5, 2021, 7:01 PM IST

தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005இன் கீழ், அரசுத் துறைகள், அரசு உதவிபெறும் துறைகளின்கீழ் பல்வேறு தகவல்களைப் பெற முடியும். அந்த வகையில், ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் மெஹபூபா முப்திக்கு எவ்வளவு செலவிடப்பட்டுள்ளதென சமூக ஆர்வலர் இனாம்-உன்-நபிசெளத்கர் என்பவர் கடந்த செப். 01ஆம் தேதி தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (ஆர்.டி.ஐ.) கீழ் கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்குப் பதில் அளித்த மத்திய அரசு, “ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதலமைச்சரும் மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவருமான மெஹபூபா முப்தி 2018ஆம் ஆண்டு ஜனவரி முதல் ஜூன் வரையிலான ஆறு மாதங்களில் ஸ்ரீநகரின் குப்கர் சாலையில் உள்ள அவரது அதிகாரப்பூர்வமான இல்லத்தை புதுப்பிக்க ஏறத்தாழ 82 லட்சம் ரூபாய் அரசின் பணத்தைச் செலவழித்துள்ளார். 2018 மார்ச் 28 ஆம் தேதி தரைவிரிப்புகளை வாங்க ஒரே நாளில் ரூ.28 லட்சம் செலவிட்டுள்ளார். 2018 ஜூன் மாதம் ரூ. 22 லட்சம் மதிப்புள்ள எல்.ஈ.டி. டிவி உள்ளிட்ட பல்வேறு பொருள்களுக்கு ரூ.25 லட்சத்திற்கும் அதிகமான பணத்தைச் செலவிட்டுள்ளார்.

பிப்ரவரி 22, 2018 அன்று 11 லட்சத்து 62 ஆயிரம் ரூபாய்க்குப் போர்வைகள் வாங்கியுள்ளார். 2016ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் 2018ஆம் ஆண்டு ஜூலை மாதம் வரை இரண்டு ஆண்டு காலப்பகுதியில் ரூ.40 லட்சம் மதிப்புள்ள கட்லரி பொருள்களை வாங்கியுள்ளார். ரூ.2 லட்சத்து 94 ஆயிரத்து 314 ரூபாய் மதிப்புள்ள தோட்டக் குடைகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. ஜனவரி 30, 2017 அன்று 14 லட்சம் ரூபாய் செலவு செய்துள்ளார். இந்த செலவினங்கள் அனைத்தும் மத்திய அரசால் செலுத்தப்பட்டது” என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆறு மாத காலத்தில் ரூ.82 லட்சம் அரசின் பணத்தை செலவழித்த மெஹபூபா முப்தி - ஆர்.டி.ஐ. தகவல்
ஆறு மாத காலத்தில் ரூ.82 லட்சம் அரசின் பணத்தைச் செலவழித்த மெஹபூபா முப்தி - ஆர்.டி.ஐ. தகவல்

ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு உரிமை மீட்கப்படும் வரை தேர்தலில் ஈடுபடப்போவதில்லை என அறிவித்திருந்த மெஹபூபா முப்தியின் சூளுரை யூனியன் பிரதேசத்தில் அண்மையில் நடைபெற்ற மாவட்ட மேம்பாட்டு கவுன்சில் தேர்தலில் வெற்றிகரமாக நிறைவடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : பிரிட்டன் பிரதமரின் இந்தியப் பயணம் ரத்து!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.