டெல்லி: கடந்த செவ்வாய்க்கிழமை (பிப். 15), சிங்கப்பூர் பிரதமர் லீ சென் லூங் நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையில், முன்னாள் இந்திய பிரதமர் ஜவஹர்லால் நேரு பற்றி புகழ்ந்து பேசினார். அப்போது இந்திய எம்.பி.கள் குறித்து அவர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
அவர் பேசுகையில், இந்திய எம்.பி.கள் பாதி பேர் மீது கொலை, பாலியல் குற்றச்சாட்டு தொடர்பான வழக்குகள் இருப்பதாக குற்றஞ்சாட்டினார். இவ்வாறு அவர் பேசியது இந்தியாவில் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இதனையடுத்து, சிங்கப்பூர் பிரதமரின் சர்ச்சைக்குரிய பேச்சுக்கு இந்திய வெளியுறவுத் துறை, சிங்கப்பூர் தூதரிடம் விளக்கம் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: கர்நாடகாவில் கல்லூரிகள் திறப்பு: ஹிஜாபுக்கு மறுப்பு!