டெல்லி : வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய் சங்கருக்கு வியாழக்கிழமை (ஜன.27) கோவிட்-19 பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில், தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தங்களை தாங்களே தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.
இது குறித்து ட்விட்டரில் ஜெய்சங்கர், “எனக்கு கோவிட்-19 பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில் என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தங்களை தாங்களே தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் ஜெய்சங்கர் இந்தியா- பிரான்ஸ் உறவு வலிமையாக இருக்கிறது என மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார். மேலும் இந்த வலுவான உறவை அடுத்தக்கட்டத்துக்கு கொண்டு செல்வதற்கான முயற்சிகள் நடந்துவருகின்றன” என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2 லட்சத்து 86 ஆயிரத்து 384 பேருக்கு கரோனா பெருந்தொற்று வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கரோனா பரவல் விகிதமும் 19.5 சதவீதம் ஆக அதிகரித்துள்ளது. நேற்று ஒரு நாளில் மட்டும் 573 பேர் உயிரிழந்துள்ளனர். கோவிட் பெருந்தொற்றுக்கு 22 லட்சத்து 2 ஆயிரத்து 472 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
இதையும் படிங்க : தேசியவாத காங். தலைவர் சரத் பவாருக்கு கரோனா உறுதி