லக்னோ: உத்தரப்பிரதேச தேர்ர்தல் முடிந்த நிலையில் சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் சமீபத்தில் பேசும் போது "உத்தரப்பிரதேச தேர்தலில் பிஎஸ்பி தனது வாக்குகளை பிஜேபிக்கு மாற்றியுள்ளது. அதற்கு ஈடாக பாஜக மாயாவதியை ஜனாதிபதியாக்குகிறதா இல்லையா என்பதுதான் வரும் காலங்களில் சுவாரஸ்யமாக இருக்கும்" என்று மெயின்புரியில் கூறினார்.
இந்த பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து பேசிய பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான மாயாவதி, "நாட்டின் ஜனாதிபதியாக வேண்டும் என்று நான் கனவிலும் நினைத்ததில்லை. தாழ்த்தப்பட்ட மக்களை முன்னேற்றுவதற்காக நான் செய்து வரும் பணியை முதலமைச்சர் மற்றும் பிரதமர் ஆவதன் மூலம் மட்டுமே சாதிக்க முடியும்.
அது ஜனாதிபதியானால் முடியாது என்பதை நான் அறிவேன், எனவே சமாஜ்வாதி கட்சி அதை மறந்துவிட வேண்டாம். உத்தரப்பிரதேச முதலமைச்சராக வருவதற்கான பாதையை தெளிவுபடுத்துவதற்காக தான் என்னை நாட்டின் ஜனாதிபதியாக்க வேண்டும் என்று சமாஜ்வாதி தலைவர் கனவு காண்கிறார்’ என்று பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி கூறியுள்ளார்.
இதையும் படிங்க:இலங்கைக்கு உதவ தனித் தீர்மானம்.. பதிலளிக்காத ஒன்றிய அரசு.. முதலமைச்சர் ஸ்டாலின் குற்றச்சாட்டு..!