லக்னோ : பிராமண சமூகத்தினரின் பெரும் ஆதரவுடன் உத்தரப் பிரதேசத்தில் பகுஜன் சமாஜ் ஆட்சி அமையும் என்று மாயாவதி செவ்வாய்க்கிழமை (செப்.7) நம்பிக்கை தெரிவித்தார்.
உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள பகுஜன் சமாஜ் கட்சி அலுவலகத்தில் மாயாவதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “நாங்கள் எந்த ஒரு சாதியின் பின்னாலும் இல்லை, அனைத்து சாதியினரையும் மதிக்கிறோம்” என்றார்.
தொடர்ந்து அவர் கூறுகையில், “மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் ஆட்சியில் பிராமணர்கள் உள்பட அனைத்து சாதியினரும் பாதுகாப்பாக உணர்ந்தனர். பகுஜன் சமாஜ் ஒருபோதும் போலியான வாக்குறுதிகளை மக்களுக்கு அளித்தது கிடையாது. அனைத்து மட்டத்திலும் வளர்ச்சிக்காக பாடுபட்டுள்ளோம். பெருந்தொற்று காலத்திலும் நாங்கள் முன்னின்று மக்கள் பணி செய்கிறோம்.
ஆகையால் தொற்று பரவலின்போது கட்சிக் கூட்டங்கள் நடத்தவில்லை. மாநில பாஜக அரசு எங்கள் கட்சி உறுப்பினர்களை குறி வைக்கிறது. உத்தரப் பிரதேசத்தில் பிராமணர்கள் ஆதரவுடன் பகுஜன் சமாஜ் ஆட்சி அமைக்கும். பிராமணர்கள் அறிவுஜீவிகள், ஒவ்வொரு சட்டப்பேரவையில் குறைந்தது 1,000 பிராமணர்களையாவது கட்சியில் சேர்க்க வேண்டும்” என்றார்.
இதையும் படிங்க : நாடாளுமன்ற வரலாற்றில் இதுபோன்ற மோதலை பார்த்ததில்லை - மாயாவதி