மதுரா: உத்தரப் பிரதேச மாநிலம் மதுராவில் உள்ள காவல் நிலையத்தில் திருமணமான பெண் ஒருவரின் தாயும், சகோதரரும் அந்த பெண் கோரக்பூரைச் சேர்ந்த வேறொரு பெண்ணை திருமணம் செய்ய போவதாக கூறியதற்கு தீக்குளிக்க முயற்சித்தனர். முன்னதாக, அந்தப் பெண் கணவர் இடையே ஏற்பட்ட பிரச்சினையால் மாமியார் வீட்டை விட்டு வெளியேறி அவரது பெற்றோருடன் வாழ்ந்து வருகிறார்.
இதனையடுத்து கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு கோரக்பூரைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் இன்ஸ்டாகிராமில் பார்த்து பழக ஆரம்பித்துள்ளார். அன்றிலிருந்து அந்த பெண்ணை காதலித்து வந்த அவர், தற்போது அவளை திருமணம் செய்துகொள்ள விரும்பி உள்ளார்.
இருப்பினும், பெண்ணின் குடும்பத்தினர், அவரது முடிவுக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். எனவே அவரது வழக்கறிஞர் மூலம், குடும்பத்தை விட்டு பிரிந்து செல்லக் கோரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து அப்பெண்ணின் குடும்பத்தினர் இன்று (செப்-28) காவல் நிலையத்திற்கு வரவழைக்கப்பட்டனர். இரு தரப்பினருக்கும் இடையே பேச்சு வார்த்தை நடந்தது. இருப்பினும் அப்பெண் அவரது முடிவில் உறுதியாக இருந்தார்.
இதனால் கோபமடைந்த அப்பெண்ணின் குடும்பத்தினர் காவல் நிலையத்திலேயே தற்கொலைக்கு முயன்றனர். உடனடியாக காவல் துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தி சமாதானம் செய்தனர். இது குறித்து பேசிய எஸ்பி திரிகுன் பிசென், “இரு தரப்பினருக்கும் விளக்கம் அளிக்கப்பட்டது. இதனையடுத்து இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:மாமனாரின் ஆணுறுப்பை அறுக்க முயன்ற மருமகள்...!