குஜராத்: சூரத் மாவட்டம் பல்சானா தாலுகா, வாரேலி கிராமத்திலுள்ள முகக்கவசம் தொழிற்சாலையில் இன்று (அக்டோபர் 18) காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
இத்தொழிற்சாலையில் சுமார் 200-க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்துவருகின்றனர். இந்நிலையில், இன்று (அக்டோபர் 18) காலை ஏற்பட்ட தீ விபத்தில் அனைவரும் சிக்கிக்கொண்டனர்.
இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திக்குச் சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சம்பவ இடத்தில் ஆம்புலன்ஸ் வாகனங்களும் தயார் நிலையில் இருந்தன.
இச்சம்பவத்திலிருந்து குழாயைப் பிடித்து தப்ப முயன்ற ஒருவர், தீக்காயங்களுடன் கீழே விழுந்து உயிரிழந்தார். மேலும் 15 பேர் தீக்காயங்களுடன் தப்பியுள்ளனர். அவர்களை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
இச்சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாகவும், மேலும் 125 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இது குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.