ETV Bharat / bharat

'தேர்தல் ஆணையம் தனது தோல்வியை மறைக்க முடியாது' - தோல்வியை மறுக்கமுடியாது, மறைக்கவும் முடியாது.

தொற்றுக் காலத்தில் தொடர்ந்த பெரும் தேர்தல் ஊர்வலங்கள், தேர்தல்  ஆணையம்  தனது தோல்வியை மறுக்க முடியாது, மறைக்கவும் முடியாது.

தேர்தல் ஆணையம் தனது தோல்வியை மறுக்கமுடியாது, மறைக்கவும் முடியாது

author img

By

Published : May 2, 2021, 9:00 AM IST

மேற்கு வங்கத்தில் தற்போது முடிந்திருக்கும் எட்டாவது கட்டத்தோடு, ஒரு மாத காலமாகத் தொடர்ந்து நடந்து வந்த ஐந்து சட்டசபைகளுக்குமான தேர்தல்கள் முடிவுக்கு வந்துவிட்டன. தமிழ்நாடு, பாண்டிச்சேரி, கேரளா, மற்றும் அஸ்ஸாம் ஆகியவற்றின் சட்டசபைகளுக்கான தேர்தல்கள் ஒரே கட்டமாக ஏப்ரல் 6-ஆம் தேதி அன்றே முடிந்துவிட்டன.

ஆனால் மேற்கு வங்கத்தில் மட்டும் தேர்தல் எட்டுக் கட்டமாக நடந்தபடியால் அந்த மாநிலத்து மக்கள் ஒரு மாதமாகவே பதற்ற நிலையிலே இருக்கும்படி ஆயிற்று. அதனால் மேற்கு வங்கத்துச் சட்டசபைத் தேர்தலை எட்டுக் கட்டமாக நடத்துவது என்று தேர்தல் ஆணையம் எடுத்த தீர்மானத்தின் அறிவுப்பூர்வமான தன்மை இப்போது கேள்விக்கு உள்ளாகி இருக்கிறது.

தொற்றுக் காலத்தில் தொடர்ந்த பெரும் தேர்தல் ஊர்வலங்கள்

கோவிட் அச்சத்தால் ஏராளமான வாக்காளர்கள் வாக்குச் சாவடிகளுக்கு வராமல் போய்விட்டதால், தங்களது வெற்றி தோல்வியை அது பாதிக்குமோ என்று வேட்பாளர்கள் கவலைப்பட ஆரம்பித்து விட்டார்கள். தேர்தலில் யார் வேண்டுமானாலும் ஜெயிக்கட்டும்; யார் வேண்டுமானாலும் தோற்கட்டும். ஆனால் இறுதியாக இதை நாம் சொல்லியே ஆக வேண்டும்: தேர்தல் நடந்த மாநிலங்களில் கோவிட் தொற்றுச் சம்பந்தமான எச்சரிக்கைகளைக் கடுமையாக நடைமுறையில் கொண்டுவர நிச்சயமாகத் தவறிவிட்டது தேர்தல் ஆணையம்.

தொற்றுநோய் ஊரெங்கும் தலைவிரித்தாடும் காலத்தில் தேர்தலை நடத்துவது என்பது தேர்தல் ஆணையத்திற்கு நிச்சயமாக கயிற்றில் நடப்பது போலத்தான் இருக்கும். தேர்தலை நடத்துவதற்குத் தான் தயார் நிலையில் இருப்பதாக, கடந்த வருடம் அக்டோபர் மாதத்திலே மிகத் தெளிவாகவே சொல்லி விட்டது தேர்தல் ஆணையம் என்பதை இங்குப் பதிவு செய்தே தீர வேண்டும். பெருங்கூட்டத்தை, ஊர்வலத்தைக் கூட்டுவது சம்பந்தமான தான் விதித்திருக்கும் வழிகாட்டு நெறிகளை, முறைகளை மீறுபவர்கள் எவர் ஆயினும் அவர்கள் மீது பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் 51-லிருந்து 60 வரையிலான பிரிவுகள் படியும், இந்திய தண்டனைச் சட்டத்தின் 188-ஆவது பிரிவின் படியும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆகத் தெளிவாகவே தேர்தல் ஆணையம் எச்சரித்திருந்தது. இந்த வழிகாட்டு நெறிகளை பீகார் தேர்தலின் போது ஆணையம் கடைப்பிடித்தது.

தேர்தல் ஆணையம் தனது தோல்வியை மறுக்கமுடியாது

ஆயினும், அதே ஆர்வத்தை இப்போது முடிந்திருக்கும் ஐந்து சட்டசபைகளுக்கான தேர்தல்களின் போது ஆணையம் கடைப்பிடிக்கவில்லை. கோவிட் சம்பந்தமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்று தேர்தல் ஆணையத்தைப் பல உயர்நீதி மன்றங்கள் குறை சொல்லியிருக்கின்றன. கோவிட் நெறிமுறைகளைக் காற்றில் மிதக்கவிட்டு பல்வேறு கட்சிகளின் பெரிய தலைவர்கள் பெருங்கொண்ட ஊர்வலங்களை நடத்திக் காட்டியபோது தேர்தல் ஆணையம் வாய்மூடி மெளனியாக இருந்து வேடிக்கைதான் பார்த்தது. அதனால் அது உயர் நீதிமன்றங்களிடம் வாங்கிக் கட்டிக் கொண்டதற்கு அதுதான் பொறுப்பாகும்.

தேர்தல் நடந்த மாநிலங்களில் கோவிட் சம்பந்தமான தடைகளையும், கட்டுப்பாடுகளையும் நடைமுறைப் படுத்தாமல் விட்டதற்கு தேர்தல் ஆணையத்தின் மீது கொலைக் குற்றத்தைச் சுமத்தலாம் என்று சொன்ன சென்னை உயர்நீதிமன்றத்தின் அதிரடியான கருத்தினால் அதிர்ந்துபோன தேர்தல் ஆணையம், மே 2-ஆம் தேதி ஐந்து சட்டசபைத் தேர்தல்களின் வாக்கு எண்ணிக்கை முடிந்தபின்பு எந்தக் கட்சியும் வெற்றி ஊர்வலங்கள் நடத்தக்கூடாது என்று தடை விதித்திருக்கிறது. இதனாலேயே ஏற்கனவே பதிவாகி விட்ட தேர்தல் ஆணையத்தின் தோல்வி ஒன்றும் மறைந்துவிடாது.

ஒருநாளைக்கு 3.8 லட்சம் கோவிட் வழக்குகள் இந்தத் தேசத்தில் பதிவாகும் அளவுக்கு கோவிட் உச்சம் தொட்டிருக்கிறது என்பதே இந்த ஆபத்தின் கொடுமையை விளக்குகிறது. தொற்றுநோய் நெறிமுறைகளைப் பற்றிக் கிஞ்சித்தும் கவலைப்படாமல் நடந்த தேர்தல் பரப்புரைகளே இந்த அளவுக்குப் பரவிய தீநுண்மித் தொற்றின் இரண்டாம் அலைக்குக் காரணம் என்று துணிந்து சொல்ல முடியும். மார்ச் 15-ஆம் தேதிக்குப் பின்னர், தேர்தல் நடந்த மாநிலங்கள் உட்பட எல்லா மாநிலங்களிலும் கோவிட் கொந்தளிப்பு கட்டுக்கடங்காமல் போய்விட்டது. மேற்கு வங்கத்தில் முதல்கட்டத் தேர்தல் நடந்த மார்ச் 27-ஆம் தேதியில் இருந்த நிலைமையோடு ஒப்பிடும்போது இன்றைய காலக் கட்டத்தில் அந்த மாநிலத்தில் பதிவாகிக் கொண்டிருக்கும் கோவிட் தொற்றுத் தாக்குதல் 40 மடங்கு உயர்ந்திருக்கிறது.

தேர்தல் ஆணையம் தனது தோல்வியை மறுக்கமுடியாது, மறைக்கவும் முடியாது
தேர்தல் ஆணையம் தனது தோல்வியை மறுக்கமுடியாது, மறைக்கவும் முடியாது

தமிழ்நாடு, பாண்டிச்சேரி, கேரளா, மற்றும் அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களில் தேர்தல் பரப்புரைகள் வீரியத்துடன், வீறுகொண்டு நிகழ்ந்ததினால் கோவிட் தொற்றும் வீரியத்தோடு, வீறுகொண்டு ஏறிவிட்டது என்பதைப் புள்ளிவிவரங்கள் மிகத் தெளிவாகவே சொல்கின்றன. அஸ்ஸாமில் 75 சதவீதம் கோவிட் வழக்குகள் தேர்தல் பரப்புரையின் போது சரியான எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்காததினால் ஏற்பட்டிருக்கின்றன என்பதை தேசிய சுகாதார மிஷன் எடுத்து வைத்திருக்கும் தரவுகள் தெளிவுப்படுத்தி இருக்கின்றன. இதற்கான பொறுப்பை, தேர்தல் ஊர்வலங்கள் என்ற பேரில் லட்சோபலட்ச மனிதர்களைத் திரட்டி தங்களது பலத்தைக் காட்டியதில் ஆர்வம் காட்டிய அரசியல் கட்சிகள்தான் சுமக்க வேண்டும்.

தேர்தல் ஆணையம் தேர்தலுக்குத் தேதி குறித்தவுடனே அரசியல் கட்சிகள் வரிந்துக் கட்டிக் கொண்டு பிரச்சார ஆற்றில் துள்ளிக் குதிப்பது இயல்பானதுதான். ஆனால் கோவிட் நெறிமுறையைக் கடுமையாக நடைமுறைப்படுத்த தவறிய குற்றத்திற்குத் தேர்தல் ஆணையமும் நடுவண் அரசும்தான் பொறுப்பேற்க வேண்டும். அரசியல் பலத்தைக் காட்டத் திரட்டிய பெருங்கூட்டங்களும், ஊர்வலங்களும் ஆன்மிகத்தின் பேரால் கும்ப மேளாவில் திரண்ட பெருந்திரள் மக்கள் கூட்டமும் கோவிட் தொற்றுப் பரவலின் வீரியத்தை அதிகரித்து விட்டன.

ஒருவழியாகத் தேர்தல் பண்டிகை முடிவுக்கு வந்துவிட்டது. இப்போது தேசம் நிம்மதிப் பெருமூச்சு விடுகிறது. ஆனால் இனி பெருந்திரளைக் கூட்டும் பரப்புரைக் கட்டமைப்பின்மீது தேர்தல் ஆணையம் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தே ஆக வேண்டும். மின்னணுப் பரப்புரையின் தேவையை வலியுறுத்தும் காலமும் இதுதான்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.