கங்டக்: சிக்கிமில் உள்ள பிரபலமான சுற்றுலாத் தலமான நாது லாவில் இன்று (ஏப்ரல் 4) பிற்பகல் ஏற்பட்ட பனிச்சரிவு காரணமாக 150 சுற்றுலா பயணிகள் பனிக்கடியில் சிக்கினர். இவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதுவரை 22 பேர் மீட்கப்பட்டுள்ளனர். 6 பேர் உயிரிழந்துள்ளனர். இதுகுறித்து உள்ளூர் போலீசார் கூறுகையில், "நாது லாவின் ஜவஹர்லால் நேரு சாலையில் உள்ள 15ஆவது மைல் அருகே திடீரென பனிச்சரிவு ஏற்பட்டது.
இதன் காரணமாக சாலையில் சென்று கொண்டிருந்த பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து பனியால் மூடப்பட்டது. இதுதவிர மேலும் பலர் பனியில் மூழ்கினர். இப்படி உள்ளூர் மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் என மொத்தம் 150 பேர் பனிச்சரிவில் சிக்கியிருக்க வாய்ப்புள்ளது.
இந்த விபத்தில் 4 ஆண்கள், 1 பெண் மற்றும் 1 குழந்தை உள்பட 6 பேர் உயிரிழந்தனர். இவர்களின் உடல்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளோம். இதுவரை 30 சுற்றுலாப் பயணிகளை மீட்கப்பட்டுள்ளோம். மேலும் பலர் உயிரிழந்திருக்க வாய்ப்புள்ளது. எங்களுடன் உள்ளூர் மக்களும் மீட்பு பணியில் இணைந்துள்ளர்.
மாநில மற்றும் தேசிய பேரிடர் மீட்புக்குழுக்கள் சம்பவயிடத்துக்கு விரைந்துள்ளன. இந்த விபத்து தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அதுபோன்ற வீடியோக்களை யாரும் வீடியோ பகிர வேண்டாம்" எனத் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: இந்தியாவின் 11 இடங்களுக்கு பெயர் சூட்டிய சீனா - எல்லைப் பிரச்சினையில் மீண்டும் சீண்டுகிறதா?