பணமோசடி வழக்கில் ஆம் ஆத்மி அமைச்சர் சத்யேந்தா் ஜெயின் மற்றும் இருவரை அமலாக்கதுறையினர் மே 30ம் தேதி கைது செய்தனர். திகார் சிறையில் உள்ள சத்யேந்தர் ஜெயினுக்கு சிறையில் விஐபி வசதிகள் செய்து கொடுத்திருப்பதாக அமலாக்கத்துறை சிறப்பு நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது.
டெல்லி லெப்டினெண்ட் கவர்னர் வி.கே.சக்சேனா இது சம்பந்தமாக விசாரிக்க உத்தரவிட்டிருந்தார். சத்யேந்தர் ஜெயினுக்கு சிறையில் விஐபி வசதிகள் செய்து கொடுத்தது தெரியவந்ததையடுத்து திகார் காவல் கண்காணிப்பாளர் அஜித் குமார் டானிக்ஸ் அதிகாரி முன்பு சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
இந்நிலையில் திகார் சிறையில் சத்யேந்தர் ஜெயினுக்கு மசாஜ் செய்யும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. பாஜக பிரமுகர்கள் தங்கள் சமூக வலைதள பக்கத்தில் அந்த வீடியோவை பகிர்ந்து வருகின்றனர். அந்த வீடியோவில், சிறையில் சத்யேந்தர் ஜெயினுக்கு கேன் குடிநீர், மெத்தை, மசாஜ் போன்ற விஐபி வசதிகள் வழங்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.