ஹவேரி: கர்நாடகாவில் மார்கதர்சி சிட் பண்ட்ஸ் இன்று (அக்.16) மற்றொரு கிளையைத் துவங்கியுள்ளது. இது கர்நாடகா மாநிலத்தில் மார்கதர்சி நிறுவனத்தின் 23-வது கிளையாகவும், இந்தியா முழுவதும் உள்ள கிளைகளில் 110-வது கிளையாகவும் உள்ளது. ஹவேரி நகரில் மார்கதர்சி நிறுவனத்தின் புதிய கிளையை மார்கதர்சி சிட் பண்ட்ஸ் இயக்குநர் பி.லட்சுமண ராவ் திறந்து வைத்தார்.
கிளையைத் திறந்து வைத்துப் பேசிய இயக்குநர் லட்சுமண ராவ், "இன்று நாங்கள் ஹவேரியில் மார்கதர்சி சிட்ஸின் கிளையைத் திறந்துள்ளோம். இது கர்நாடக மாநிலத்தில் 23-வது கிளையாகவும், இந்தியா முழுவதும் நிறுவனத்தின் 110-வது கிளையாகவும் இருக்கும்" என்று தெரிவித்தார். மேலும், ஹவேரி மாவட்டத்தின் அனைத்து பொதுமக்களும் மார்கதர்சி சிட் பண்ட்ஸ் நிறுவனத்தின் சிட் வசதிகளைப் பெறுமாறும் அவர் கேட்டுக் கொண்டார்.
இன்றுவரை, ஹவேரி கிளையில் ரூ.15 கோடி வர்த்தகம் நடைபெற்றுள்ளது. இந்த மாத இறுதிக்குள் 20 கோடி வர்த்தகத்தை எட்டும் என எதிர்பார்க்கிறோம். ஹவேரி கிளை சிட் குழு மதிப்புகளை ரூ.1 லட்சத்திலிருந்து ரூ.25 லட்சம் சந்தாவுடன் ரூ.2,000 முதல் ரூ.1 லட்சம் வரை 25, 30, 40 & 50 மாதங்கள் சிட் காலத்தில் பெறலாம் என பி.லட்சுமண ராவ் கூறினார்.
கர்நாடகாவில் மேலும் 25 கிளைகளைத் திறக்க சாதகமான அம்சங்கள் உள்ளன. அதன் ஒரு பகுதியாக, இந்த நிதியாண்டு முடிவதற்குள் கர்நாடகாவில் மேலும் இரண்டு இடங்களில் கிளைகளை விரிவுபடுத்த உள்ளோம். கர்நாடக மக்களுக்குச் சிறந்த சிட் சேவைகளை வழங்க, மார்கதர்சி அவர்களின் நம்பகமான நிறுவனமாகவும், அவர்களின் நிதித் தேவைகளுக்கு ஒரு நல்ல நிதிப் பங்காளியாகவும் எப்போதும் நிற்கிறது" என மார்கதர்சி சிட் பண்ட்ஸ் இயக்குநர் பி.லட்சுமண ராவ் தெரிவித்தார்.
ஹவேரியில் மார்கதர்சி நிறுவனத்தில் 23-ஆவது கிளை துவக்க விழாவில் ஏராளமான சந்தாதாரர்கள் கலந்து கொண்டு மார்கதர்சி சிட் பண்ட்ஸ் மீதான தங்கள் திருப்தியை வெளிப்படுத்தினர்.
இதையும் படிங்க: தங்கம் விலை திடீர் சரிவு! இதான் சரியான நேரம் சட்டு புட்டுனு கடைக்கு கிளம்புங்க!