டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி 'மனதின் குரல்' என்ற நிகழ்ச்சி மூலம் வானொலியில் மாதம் ஒருமுறை உரையாற்றுவது வழக்கம். அந்த வகையில் இன்று (மே.30) நடைபெற்ற 77ஆவது 'மனதின் குரல்' நிகழ்ச்சியின் புயல் பாதித்த மாநிலங்கள் குறித்து அவர் ஆற்றிய உரை கீழ்வருமாறு:
நாட்டு மக்கள் தங்களது முழு பலத்தையும் வெளிப்படுத்தி கரோனாவுக்கு எதிராக போரிட்டு வருவது அனைவரும் அறிந்ததுதான். இந்த நேரத்தில் நாடு சில இயற்கைப் பேரிடர்களையும் சந்தித்து வருகிறது.
"கடந்த 10 நாள்களில் நாட்டின் மேற்கு, கிழக்கு கடற்கரைகள் இரண்டும் பெரிய சூறாவளி புயல்களை எதிர்கொண்டது. டாக்தே புயல் மேற்கு கடற்கரையையும், யாஸ் புயல் கிழக்கு கடற்கரையையும் புரட்டிப்போட்டுள்ளது. புயல் பாதித்த மாநிலங்களில் மக்கள் அனைவரும் மிக தைரியமாக புயலை எதிர்கொண்டனர். அவர்களின் ஒருங்கிணைந்த முயற்சியால் புயல் பாதிப்பிலிருந்து மீண்டுள்ளனர்.
தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இழப்புகளை சந்தித்தவர்களுடன் நாம் அனைவரும் உறுதுணையாக நிற்போம்" என்றார்.
இதையும் படிங்க: மைதிலி சிவராமன் மறைவு: கேரள முதலமைச்சர் இரங்கல்!