ETV Bharat / bharat

மணிப்பூர் நிலச்சரிவு உயிரிழப்பு எண்ணிக்கை 14ஆக உயர்வு

மணிப்பூர் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 14ஆக உயர்ந்துள்ளது. 9 பேர் மீட்கப்பட்டுள்ளனர். 60 பேர் சிக்கியுள்ளனர்.

author img

By

Published : Jul 1, 2022, 9:26 AM IST

manipur-landslide-14-dead-23-rescued-around-60-trapped-in-debris

இம்பால்: மணிப்பூர் மாநிலத்தில் தொடர்ந்து பெய்துவரும் கனமழையால் பல்வேறு மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. அந்த வகையில், துப்புல் ரயில் நிலையம் அருகே நேற்று (ஜூன் 30) ஏற்பட்ட நிலச்சரிவில் ராணுவ வீரர்கள் உள்பட 80க்கும் மேற்பட்டோர் சிக்கிக் கொண்டனர்.

இதுகுறித்து தகவலறிந்து போலீசார் மாநில பேரிடர் மீட்பு குழுவினருடன் நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுவருகின்றனர். இன்றைய நிலவரப்படி 14 பேருடைய உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. 9 பேர் உயிருடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். 60-க்கும் மேற்பட்டோர் சிக்கியுள்ளனர்.

இவர்களில் ராணுவத்தினர், ரயில்வே ஊழியர்கள், பொதுமக்களும் அடக்கம். குறிப்பாக உயிரிழந்தவர்களில் 7 பேர் ராணுவ வீரர்களாவர். இந்த நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு தலா ரூ.5 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் நிவாரணம் வழங்கப்படும் என்று அம்மாநில முதமைச்சர் என் பிரேன் சிங் அறிவித்துள்ளார்.

இதையும் படிங்க: அஸ்ஸாம் வெள்ளத்தால் 31.54 லட்சம் மக்கள் பாதிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.