ETV Bharat / bharat

"மோடிக்கு ஜனநாயகத்தில் நம்பிக்கை இல்லை" - போலீஸ் இழுத்துச் சென்றபோது சிசோடியா குற்றச்சாட்டு!

author img

By

Published : May 23, 2023, 10:35 PM IST

டெல்லி நீதிமன்றத்திற்கு மணீஷ் சிசோடியாவை அழைத்து வந்தபோது, போலீசார் அவரை இழுத்துச் சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. போலீஸ் இழுத்துச் சென்றபோது, பிரதமர் மோடிக்கு ஜனநாயகத்தில் நம்பிக்கை இல்லை என மணீஷ் சிசோடியா குற்றம் சாட்டியபடி சென்றார்.

democracy
சிசோடியா

டெல்லி: டெல்லியில் கடந்த 2021-22ஆம் ஆண்டு கலால் கொள்கையில் மாற்றங்களை செய்து, விதிகளை மீறி தனியார் மதுக்கடைகளுக்கு உரிமம் வழங்கியதாகவும், இதில் பெரும் ஊழல் நடந்திருப்பதாகவும் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு மீது பாஜகவினர் புகார் தெரிவித்தனர். இது தொடர்பாக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை தனித்தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கு பூதாகரமான நிலையில் கடந்த ஆண்டு புதிய கலால் கொள்கையை ரத்து செய்த ஆம் ஆத்மி அரசு, மீண்டும் பழைய மதுபானக் கொள்கையை அமல்படுத்தியது.

இந்த வழக்கில் கலால் துறையை வைத்திருந்த டெல்லி முன்னாள் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா உள்ளிட்ட பலர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. மணீஷ் சிசோடியாவின் வீடு உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்திய சிபிஐ அதிகாரிகள், அவரிடமும் பல மணி நேரம் விசாரணை நடத்தினர். மத்திய பாஜக அரசு திட்டமிட்டு தங்களை அச்சுறுத்துவதாகவும், இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்றும் ஆம் ஆத்மி கட்சியினர் குற்றம் சாட்டினர்.

இந்த வழக்கில் முக்கிய திருப்பமாக மணீஷ் சிசோடியா கடந்த பிப்ரவரி மாதம் கைது செய்யப்பட்டார். சிபிஐ அவரை கைது செய்தது. சிபிஐ வழக்கில் சிசோடியா திகார் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், கடந்த மார்ச் மாதம் சட்டவிரோதப் பணப்பறிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறை சிசோடியாவை கைது செய்தது. இதையடுத்து திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மணீஷ் சிசோடியாவை சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையினர் தனித்தனியாக காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் சிசோடியாவின் நீதிமன்ற காவல் இன்றுடன்(மே.23) நிறைவடைந்தது. இதையடுத்து அவர் டெல்லி ரோஸ் அவன்யூ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, வழக்கு விசாரணைக்கு கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும் என அமலாக்கத்துறை தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து அமலாக்கத்துறை வழக்கில், சிசோடியாவின் நீதிமன்ற காவலை ஜூன் 1ஆம் தேதி வரை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

முன்னதாக நீதிமன்றத்திற்கு சிசோடியாவை போலீசார் அழைத்து வரும்போது, சிலர் அவரிடம் பேசவும், புகைப்படம் எடுக்கவும் முயன்றனர். டெல்லியில் ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் உள்ளிட்ட நிர்வாகத்தை கட்டுப்படுத்துவது தொடர்பான மத்திய அரசின் அவசரச் சட்டம் குறித்து சிசோடியாவிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த சிசோடியா, பிரதமர் மோடிக்கு ஜனநாயகத்தில் நம்பிக்கை இல்லை, அவர் எப்போதும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடையூறு செய்கிறார் என்றும் கூறினார். அப்போது, அவரை பேச விடாமல் தடுத்த போலீசார், அங்கிருந்து வேகமாக இழுத்துச் சென்றனர்.

இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. இந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், காவல்துறையினரின் இந்த நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: மேற்கு வங்கத்தில் கால்நடைகளை அச்சுறுத்தும் லம்பி வைரஸ் - நாளை மத்தியக்குழு ஆய்வு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.