பெங்களூரு: கர்நாடக மாநிலம் மங்களூரு ஆட்டோ குண்டுவெடிப்பு சம்பவம் நடந்த இடத்தை இன்று (நவம்பர் 23) மாநில உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திரா நேரில் சென்று பார்வையிட்டார். அதன்பின் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் ஆட்டோ ஓட்டுநர் புருஷோத்தம் பூஜாரியின் உடல்நலம் குறித்து மருத்துவர்களிடம் விசாரித்தார். இவருடன் கர்நாடக டிஜிபி பிரவீன் சூட் இருந்தார். அதைத்தொடர்ந்து இருவரும் செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது அமைச்சர் அரக ஞானேந்திரா கூறுகையில், இந்த குண்டுவெடிப்பு வழக்கு குற்றவாளி முகமது ஷாரிக் தமிழ்நாட்டின் கோவை, கன்னியாகுமரி மாவட்டங்களில் உள்ள பல்வேறு பகுதிகளுக்குச் சென்றதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. அந்த பகுதிகளுக்கு தனிப்படைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன எனத் தெரிவித்தார். அதன்பின் டிஜிபி பிரவீன் சூட் பேசுகையில், இந்த குண்டு வெடிப்பு வழக்கு விசாரணையில் ஆரம்பத்தில் இருந்தே என்ஐஏ ஈடுபட்டுவருகிறது. என்ஐஏ அலுவலர்களுடன் இணைந்தே விசாரணைகள் நடத்தப்பட்டுவருகின்றன.
இருப்பினும், முறைப்படி வழக்கு என்ஐஏவிடம் ஒப்படைக்கப்படவில்லை. விரைவில் முழுமையாக விசாரணை ஒப்படைக்கப்படும். இதுபோன்ற வழக்குகளில் பண பரிவர்த்தனைகள் முக்கியமானவை. இவருக்கு எங்கிருந்து பணம் வந்தது என்பது குறித்து தீவிர விசாரணை நடந்துவருகிறது. இவர் மீது 2019-20 ஆண்டுகளில் பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்குகளில் ஜாமீன் பெற்று வெளியே வந்த அவர் அடையாளங்களை மாற்றிக்கொண்டு அன்றாட நடவடிக்கைகளை செய்துவந்துள்ளார் எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: என்னை துண்டு துண்டுடாக வெட்டப்போவதாக மிரட்டினார்... ஷ்ரத்தாவின் புகார் கடிதம்...