ETV Bharat / bharat

மண்டேலா: இனத்தின் உரிமைக் குரலாக ஒலித்த 'கருப்பின காவலன்' - Nelson Mandela

தன் வாழ்நாளில் சுமார் 30க்கும் மேற்பட்ட ஆண்டுகளை சிறையிலேயே கழித்தவர் மண்டேலா. உலக வரலாற்றில் விடுதலைப் போராட்டத்திற்காக இத்தனை ஆண்டுகள் சிறைவாசம் செய்த தலைவர்கள் மிகச் சொற்பமே.

நெல்சன் மண்டேலா
நெல்சன் மண்டேலா
author img

By

Published : Jul 18, 2021, 1:03 PM IST

Updated : Jul 18, 2021, 1:15 PM IST

"உலகை மாற்றக்கூடிய மிகச்சக்தி வாய்ந்த கருவி கல்விதான்" நெல்சன் மண்டேலாவின் புகழ்பெற்ற வார்த்தைகள் இவை. ஜூலை 18ஆம் தேதி, இன்றைய தினம் உலகம் முழுவதும் மன்டேலா தினமாகக் கொண்டாடப்படுகிறது.

20ஆம் நூற்றாண்டை மாற்றியமைத்த கருப்பின காவலன் ஆன நெல்சன் மண்டேலாவின் பிறந்த நாளை போற்றும் விதமாக, ஐக்கிய நாடுகள் சபை ஜூலை 18-ஐ மண்டேலா தினமாக அறிவித்து 2010ஆம் ஆண்டு முதல் கொண்டாடி வருகிறது.

மண்டேலாவின் இளமை பருவம்

1918ஆம் ஆண்டு ஜூலை 18ஆம் தேதி தென்னாப்பிரிக்காவின் குலு என்ற கிராமத்தில் பிறந்த மண்டேலா, சோசா பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர். தனது 12ஆவது வயதில் தந்தையை இழந்த மண்டேலா, ஆடு மாடுகள் மேய்த்துக்கொண்டே தனது கல்வியை தொடர்ந்தார்.

இளம் வயதில் மண்டேலா
இளம் வயதில் மண்டேலா

1938ஆம் ஆண்டில் போர்ட் ஹர் பல்கலைகழகத்தில் சேர்ந்த இவர், மாணவர் போரட்டத்தில் ஈடுபட்டத்தற்காக இரண்டு ஆண்டுகளில் அங்கிருந்து வெளியேற்றப்படுகிறார்.

பின்னர் தென்னாப்பிரிக்கா பல்கலைகழகத்தில் பி.ஏ பட்டப்படிப்பை முடித்த அவர், ஆப்பிரிக்கன் தேசிய காங்கிரஸ் கட்சி கூட்டங்களில் பங்கேற்கிறார். தென்னாப்ரிக்காவில் கருப்பின அடிமை முறை மிக மோசமாக இருந்த காலம் அது.

வழக்கறிஞர் பணிக்காக தென்னாப்ரிக்கா சென்ற காந்தி, தனது முதல் போராட்டத்தை அங்கிருந்த கருப்பின அடிமைத் தளைக்கு எதிராக நடத்தினார் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

ஜோகனஸ்பெர்க் நகரில் மண்டேலா வசித்த வீடு
ஜோகனஸ்பெர்க் நகரில் மண்டேலா வசித்த வீடு

நிறவெறி சட்டத்திற்கு எதிரான போராட்டம்

இந்த அடிமை முறை பின்னாளில் மேலும் வலுவடைந்து Aparthied என்ற கொடுஞ்சட்டமாக 1950களில் அமலுக்கு வருகிறது. அடிப்படை உரிமைகள், சமூக செயல்பாடுகள் உள்ளிட்ட அனைத்திலும் கருப்பின மக்கள் ஒடுக்கப்படும் அந்த சட்டங்களுக்கு எதிராக நெல்சன் மண்டேலா குரல் கொடுக்கத் தொடங்கினார்.

1951 ஆப்ரிக்கா தேசிய காங்கிரஸ் அமைப்பின் இளைஞர் அணி அமைப்பின் தலைவாராகிறார் மண்டேலா. 1956ஆம் ஆண்டில் தேசதுரோக வழக்கில் கைது செய்யப்படும் மண்டேலா 1961ஆம் ஆண்டு விடுதலை செய்யப்படுகிறார்.

1962ஆம் ஆண்டு தொடக்கத்தில் ஆயுதப் பயிற்சிக்காக தென்னப்பிரிக்காவை விட்டு வெளியேறும் மண்டேலா, ஜூலை மாதம் நாடு திரும்புகிறார். நாட்டை விட்டு வெளியேறிய குற்றச்சாட்டில் மீண்டும் ஐந்தாண்டுகள் சிறை தண்டனைக்குள்ளாகிறார்.

1963ஆம் ஆண்டு ராபன் தீவில் உள்ள சிறைக்கு அனுப்பப்படும் மண்டேலாவுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படுகிறது. அதன்பின் சுமார் 27 ஆண்டுகள் ராபன் தீவு சிறையிலேயே மண்டேலாவின் வாழ்நாள் கழிகிறது.

மண்டேலா சிறைவாசம் செய்த ராபன் தீவு சிறை
மண்டேலா சிறைவாசம் செய்த ராபன் தீவு சிறை

தன் வாழ்நாளில் சுமார் 30க்கும் மேற்பட்ட ஆண்டுகளை சிறையிலேயே கழித்தவர் மண்டேலா. உலக வரலாற்றில் விடுதலைப் போராட்டத்திற்காக இத்தனை ஆண்டுகள் சிறைவாசம் செய்த தலைவர்கள் மிகச் சொற்பமே.

சிறை கைதியிலிருந்து அதிபர்

1990ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஆப்ரிக்கா தேசிய காங்கிரஸ் கட்சி மீதான தடை விளக்கப்பட்டு சிறையிலிருந்து மண்டேலா விடுதலை செய்யப்படுகிறார்.

இந்திய அரசு மண்டேலாவுக்கு பாரத ரத்னா விருதளித்து பெருமை செய்தது. பாரத ரத்னா விருது பெற்ற முதல் வெளிநாட்டவர் என்ற பெருமை மண்டாலேவையே சாரும். 1993ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசை பெற்ற மண்டேலா, 1994ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் களம் இறங்கிய அவர், முதல் முறையாக வாக்களிக்கிறார்.

முதல்முறை வாக்களிக்கும் மண்டேலா
முதல்முறை வாக்களிக்கும் மண்டேலா

அந்த தேர்தலில் வெற்றிப் பெற்று தென்னாப்ரிக்காவின் முதல் கருப்பின அதிபராகிறார் மண்டேலா. 2001ஆம் ஆண்டு மண்டேலாவுக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்படவே, 2004இல் பொது வாழ்கையிலிருந்து ஓய்வு பெற்றார் மண்டேலா.

மனித உரிமை, சுதந்திரம், நீதி ஆகியவற்றின் முகமாக திகழந்த மண்டேலா 2013ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி தனது 95ஆவது வயதில் காலமானார்.

லண்டனில் உள்ள மண்டேலா சிலை
லண்டனில் உள்ள மண்டேலா சிலை

கருப்பினத்தின் உரிமைக் குரல்

நெல்சன் மண்டேலா "A Long Walk to Freedom" (சுதந்திரத்தை நோக்கிய நீண்ட பயணம்) என்ற தலைப்பில் தனது சுயசரிதையை 1994ஆம் ஆண்டு வெளியிட்டார். இந்த சுயசரிதை 2013ஆம் ஆண்டில் திரைப்படமாகவும் வெளியானது.

நெல்சன் மண்டேலாவின் போராட்ட வாழ்வுதான் உலகளவில் கருப்பின மக்கள் மண்ணில் சம உரிமை பெறுவதற்கு அச்சாரமாக அமைந்தது. கருப்பினத்தவர்கள் காவலனாகவும், மறைவுக்குப்பின் காவல் தெய்வாகவும் திகழும் நெல்சன் மண்டேலாவின் பிறந்த தினம் இன்று.

Etv - Bharat
அன்றைய அமெரிக்க அதிபர் கிளின்டனுடன் மண்டேலா

இதையும் படிங்க: இந்தியாவின் 'மக்கள் தலைவன்' (லோக் நாயக்) ஜே.பி.யின் கதை

Last Updated : Jul 18, 2021, 1:15 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.