ETV Bharat / bharat

கட்டாயம் தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும் - ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் வலியுறுத்தல்

புதுச்சேரியில் கரோனா பரவல் அதிகரிப்பதை தடுக்க பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும், தடுப்பூசி போட்டுகொள்ள வேண்டும் என்று ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் வலியுறுத்தியுள்ளார்.

ஆளுநர் தமிழிசை சௌந்தராஜன் வலியுறுத்தல்
ஆளுநர் தமிழிசை சௌந்தராஜன் வலியுறுத்தல்
author img

By

Published : Apr 7, 2021, 11:38 PM IST

புதுச்சேரி மாநிலத்தின் துணைநிலை ஆளுநர் இன்று(ஏப்.6) ரெட்டியார்பாளையம் பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் கரோனா தடுப்பு சிகிச்சை முகாமை தொடங்கி வைத்தார். முன்னதாக கரோனா விழிப்புணர்வு ஆட்டோ பரப்புரையை கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஆட்டோக்களில் தடுப்பூசி விழிப்புணர்வு துண்டு பிரசுரம் ஒட்டினார். இந்நிகழ்ச்சியில் பேசிய அவர் ’’புதுவையில் கரோனா தாக்கத்தைக் கட்டுப்படுத்த ஒவ்வொரு வியாழக்கிழமையன்றும் உயர்மட்ட குழு கூட்டம் நடைபெற்று வருகிறது.புதுச்சேரியில் கரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

இதனால் அனைத்து தரப்பு மக்களும் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும். அதேபோல 45 வயதுக்கு மேற்பட்ட அனைவரையும் தமது குடும்ப நலனுக்காக கட்டாயம் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியவர், இந்த விஷயத்தில் அலட்சியம் காட்ட வேண்டாம்’’ என்று கூறினார். இந்நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.

இதையும் படிங்க: அரியர் தேர்வு ரத்து உத்தரவை ஏற்க இயலாது - சென்னை உயர் நீதிமன்றம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.