ETV Bharat / bharat

பெண்ணின் மீது ஆசிட், பெட்ரோல் ஊற்றி உயிருடன் கொன்ற நபர் கைது - பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்கல்

மகாராஷ்டிர மாநிலத்தில் ஒருவர் பெண்ணின் மீது ஆசிட் வீசியதுடன் மட்டுமல்லாமல், அவரை பெட்ரோல் ஊற்றி உயிருடன் கொலை செய்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

Man who threw acid on woman, attempted to burn her alive in Beed arrested

author img

By

Published : Nov 16, 2020, 10:44 AM IST

மும்பை: மகாராஷ்டிர மாநிலம் பீட் மாவட்டம் நெக்நூர் பகுதியில் கடந்த 13ஆம் தேதி மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கும் சம்பவம் அரங்கேறியுள்ளது.

காவல் துறையினரின் தகவலின்படி, நவம்பர் 13ஆம் தேதி பெண் ஒருவர் ஆசிட் காயங்களுடனும், பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட நிலையிலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்த தகவல் கிடைத்ததையடுத்து காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வழக்குப்பதிவு செய்தனர்.

பின்னர் இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டதில், அவர் ஒரு நபரால் ஆசிட் வீசி தாக்கப்பட்டதுடன், உயிருடன் இருக்கும்போதே பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்டது தெரியவந்துள்ளது. இதற்கிடையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

இந்த விவகாரத்தில் மகாராஷ்டிர உள்துறை அமைச்சர் அனிஸ் தேஷ்முக், இந்த சிறப்பு கவனத்தை செலுத்துமாறு அறிவுறுத்தியுள்ளார். மேலும், இதன் விசாரணையை விரைவு நீதிமன்றத்திற்கு மாற்றவும் உத்தரவிட்டுள்ளார். மேலும், குற்றவாளி விரைந்து கைது செய்யப்படவேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

இதன்பின், குற்றவாளி மேல் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு, தனிப்படை அமைக்கப்பட்டது. இதையடுத்து குற்றவாளி கைது செய்யப்பட்டார். மேலும் குற்றவாளிக்கு கடுமையான தண்டனை வழங்கப்படவேண்டும் எனவும் அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

இதையும் படிங்க: அதிர வைக்கும் குற்றச் சம்பவங்கள்: கிரிமினல்களை ஈர்த்த திரைப்படங்கள்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.