ETV Bharat / bharat

நிரந்தரப்பணிக்கு ஆசைப்பட்டு 5 மாத குழந்தையைக் கொலை செய்த பெற்றோர் கைது! - A parent who kills a child for a permanent job

மாநில அரசில் நிரந்தரப்பணியில் பிரச்னை வரக்கூடாது என்பதற்காக தனது ஐந்து மாத பெண் குழந்தையை கால்வாயில் வீசி கொலை செய்த பெற்றோரை காவல்துறையினர் கைது செய்தனர்.

நிரந்தரப் பணிக்கு ஆசைப்பட்டு 5 மாத குழந்தையை கொலை செய்த பெற்றோர் கைது

author img

By

Published : Jan 24, 2023, 3:38 PM IST

ஜெய்ப்பூர்: பிகானேர் மாவட்டத்தில் வசிப்பவர், ஜவர்லால் மேக்வால் (36). இவர் மாநில அரசாங்கத்தில் ஒப்பந்த ஊழியராகப் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு கீதா தேவி என்பவருடன் திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளன. ஜெய்ப்பூரில் மாநில அரசாங்கத்தில் ஒப்பந்த ஊழியராகப் பணி புரிபவர்களுக்கு திருமணமாகி, இரண்டு குழந்தைகளுக்கு மேல் இருந்தால் பணி நிரந்தரம் செய்யப்படாது என்று பணியாளர் கட்டாய ஓய்வு பாலிசியில் உள்ளது.

இந்நிலையில் ஒப்பந்த ஊழியராகப் பணிபுரிந்து நிரந்தரப் பணியை எதிர்பார்த்து காத்திருக்கும் ஜவர்லால் மேக்வாலுக்கு 3-வது குழந்தை பிறந்து 5 மாதங்களே ஆன நிலையில், இரண்டு குழந்தை பாலிசி கொள்கையால் எங்கு தனக்கு நிரந்தரப்பணி கிடைக்காமல் போய்விடுமோ என்ற அச்சத்தில் இருந்துள்ளார்.

ஆகையால், தனது மனைவியுடன் சேர்ந்து பிறந்து 5 மாதங்களே ஆன மூன்றாவது பெண் குழந்தையை கொலை செய்ய இருவரும் திட்டமிட்டுள்ளனர். பின்னர் ஞாயிற்றுக்கிழமை மாலையில் சத்தர்கர் காவல் நிலையம் அருகே உள்ள கால்வாயில் கொலை செய்து வீசியுள்ளனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்து இறந்த நிலையில் கிடந்த குழந்தையின் சடலத்தை போலீசார் மீட்டு விசாரணை செய்ததில், இச்சம்பவம் அம்பலமானது. பிறகு கணவன், மனைவி இருவரையும் காவல் துறையினர் திங்கட்கிழமை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

பின்னர் இதுகுறித்து பிகானேர் காவல் கண்காணிப்பாளர் கூறுகையில், "விசாரணையில் நிரந்தர அரசுப் பணியை பெறுவதற்காக கணவன், மனைவி இருவரும் சேர்ந்து இந்தச் செயலை மேற்கொண்டுள்ளனர். ஆகையால், ஜவர்லால் மேக்வால் மற்றும் அவரது மனைவி கீதா தேவி ஆகியோர் மீதும் இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) 302 மற்றும் 120பி பிரிவுகளின் கீழ் சத்தர்கர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: மானாமதுரை அருகே 3 ஆண்டுகளுக்கு பிறகு களைகட்டிய மீன்பிடி திருவிழா

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.