உத்தரப் பிரதேச மாநிலம் மிர்சாபூர் ரயில் நிலையத்தில், ஹவுராவை நோக்கிச் செல்லும், நந்தன் கனன் எக்ஸ்பிரஸ் கிளம்பும் வேளையில் தொழிலாளி ஒருவர் அதில் ஏற முயற்சி செய்தார். அப்போது தனது தலையில் வைத்துள்ள கூடையை முதலில் ரயிலில் தூக்கி எறிந்துவிட்டு, தானும் உள்ளே நுழைய முயன்றார்.
அப்போது, எதிர்பாராதவிதமாக தவறிவிழுந்து, ரயிலுக்கும் தண்டவாளத்திற்கும் இடையே சிக்கிக்கொண்டார். அவரை மீட்க அருகிலிருந்தவர்கள் முயற்சித்தனர். இறுதியில் ரயில் சென்ற பின்பு அவரை மீட்டனர். தக்க நேரத்தில் அருகிலிந்தவர்கள் மீட்டதால் பிழைத்தார். அது குறித்த காணொலி தற்போது வைரலாகிவருகிறது.
இதையும் படிங்க: தண்டவாளத்தைக் கடக்கும்போது ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு!