கேரளா (இடுக்கி): கேரளாவின் இடுக்கி மாவட்டம் மூலமற்றம் பகுதியில் பெண்கள் சிலர் சேர்ந்து உணவகம் நடத்தி வருகின்றனர். இங்கு நேற்று (மார்ச் 26) இரவு 10 மணியளவில் பிலிப் மார்ட்டின் என்பவர் மதுபோதையில் உணவு உண்பதற்காக வந்துள்ளார். அப்போது, உணவகம் நடத்திவரும் பெண்களுக்கும், பிலிப் மார்ட்டினுக்கும் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
ஆத்திரமடைந்த பிலிப் மார்ட்டின் தனது காரில் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து வந்து உணவகம் நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு காரில் தப்பியுள்ளார். நல்வாய்ப்பாக அங்கிருந்தவர்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இந்நிலையில், பிலிப் அங்கிருந்து தப்பி தொடுபுழா நோக்கிச் சென்றுள்ளார்.
அப்போது அவர் கார் வழியில் பைக்கில் சென்று கொண்டிருந்த சனல் சாபு, பிரதீப் மீது மோதியது. பிலிப், அங்கு மீண்டும் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தகராறு செய்து, அவர்களை துப்பாக்கியால் சுட்டுள்ளார்.
இதில், பேருந்து ஊழியரான சனல் சாபு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது நண்பர் பிரதீப் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. காவல்துறையினர் துப்பாக்கி சூடு நடத்திய பிலிப் மார்ட்டினை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: மாட்டின் வாலால் மாட்டிக் கிட்ட சபாநாயகர்.. சீக்கிய அமைப்புகளிடம் மன்னிப்பு!