சத்தீஸ்கர் மாநிலம் பஸ்டர் மாவட்டத்தில் டிக்காரா லோஹங்கா கிராமத்தில் வசித்து வருபவர் சந்து மெளரியா. இவரை அதே கிராமத்தில் வசிக்கும் ஹசீனா(19),சுந்தரி(21) ஆகிய இரு பெண்களும் காதலித்து வந்துள்ளனர்.
இருவரின் அன்பையும் புரிந்துக்கொண்ட சந்து, இருவரையும் திருமணம் செய்துக்கொள்ள முடிவு செய்தார். சந்து மீதான காதலால், இரண்டு பெண்களும் இதற்கு மறுப்பு தெரிவிக்கவில்லை. இந்தத் திருமணத்திற்கு இரண்டு பெண்களின் குடும்பத்தினரும் சம்மதம் தெரிவித்துள்ளனர். மூன்று பேரின் பெயர்களையும் திருமண பத்திரிகையில் அச்சிட்டு கிராம மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
திட்டமிட்டப்படியே, ஊர் மக்கள் முன்னிலையில், ஹசீனா, சுந்தரி ஆகிய இருவரையும் சந்து திருமணம் செய்துக்கொண்டார். இந்தத் திருமணத்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது.
பலரும் எதிர்மறையான கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர். இத்தகையை திருமணம் பெரும் கொண்டாடத்துடன் பஸ்டர் மாவட்டத்தில் நடைபெறுவது இதுவே முதல்முறை ஆகும். இந்த வகையான திருமணம் இந்து திருமணச் சட்டத்தில் ஒரு குற்றமாகும். இருப்பினும், இது தொடர்பாக எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை.