உத்தரபிரதேச மாநிலம் காஜியாபாத்தில் உள்ள கனாவனியில் இருக்கும் குடியிருப்பில், சனிக்கிழமை (அக் 29) இரவு ஆறு வயது சிறுமி தனது மூத்த சகோதரி மற்றும் தம்பியுடன் இருந்துள்ளார். வழக்கம்போல் வேலைக்குச் சென்ற இவர்களது தாய், மறுநாள் (அக் 30) வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வீட்டில் இருந்த மூவரும் தாயின் காலை பிடித்து கதறி அழுதுள்ளனர்.
பின்னர் மூத்த சகோதரி, “பக்கத்து வீட்டில் இருக்கும் அஜய் என்பவர், நம் வீட்டிற்கு வந்து தங்கையை பாலியல் ரீதியாக துன்புறுத்தினார்” என தெரிவித்துள்ளார். இதனையடுத்து தனது ஆறு வயது மகளை சோதனை செய்த தாய், சிறுமி டிஜிட்டல் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.
உடனடியாக இதுகுறித்து சிறுமியின் தாய் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதன் அடிப்படையில் இந்திய தண்டனைச் சட்டம் 376AB மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், குற்றவாளி அஜய் என்ற ராம் நரேஷ் என்பவரை தேடி வந்தனர்.
இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை (அக் 30) நள்ளிரவில் கனோஜ் மாவட்டத்தில் உள்ள தனது சொந்த கிராமத்திற்கு தப்பிச் செல்ல முயன்ற அஜய் கைது செய்யப்பட்டார். மேலும் டிஜிட்டல் பாலியல் வன்கொடுமை என்பது ஆணின் பிறப்புறுப்பை தவிர உடலின் மற்ற அனைத்து பாகங்கள் மூலம் கட்டாயப்படுத்தி பாலியல் செயல்களில் ஈடுபடுதல் என்பதாகும்.
இதையும் படிங்க: ராஜஸ்தானில் ரூ.500க்கு ஏலம் போகும் பெண்கள்... மாநில அரசுக்கு பாய்ந்த நோட்டீஸ்...