ஜெய்பூர்: ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர் மாவட்டத்தில் 40 வயது மதிக்கத்தக்க தந்தை தனது 16 வயது மகளை ஓராண்டாக பாலியல் வன்புணர்வு செய்துவந்துள்ளார்.
இதுகுறித்து வெளியில் தெரிந்தால் கொலை செய்துவிடுவதாக மிரட்டல் விடுத்துள்ளார். ஒருகட்டத்தில், சிறுமி தனது தாயிடம் உண்மையை தெரிவித்துள்ளார். உடனே அவருடைய தாய் அருகில் உள்ள காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அதனடிப்படையில், சிறுமியின் தந்தையை கைது செய்ய காவலர்கள் முற்பட்டபோது, அவர் தப்பியோடி தலைமறைவானார். சில வாரங்களாக தேடப்பட்டுவந்த நிலையில், நேற்று கைது செய்யப்பட்டார். அவருக்கு போக்சோ சட்டத்தின் கீழ் தண்டனை வழங்கப்படஉள்ளது.
இதையும் படிங்க: பெற்ற தாயை பாலியல் வன்புணர்வு செய்த இளைஞன் கைது!