கோழிக்கோடு: கேரளாவில் கோழிக்கோடு பகுதியை சேர்ந்த பிரசாந்த்( வயது 29) எனும் இளைஞர் ஒருவர், நீண்ட காலம் முடி கொட்டுவதற்கு மருந்து எடுத்து வந்த நிலையில், அனைத்து முடியும் கொட்டியதால் மனமுடைந்து தற்கொலை செய்துகொண்டார். கடந்த அக்டோபர் மாதம் ஒன்றாம் தேதி நடந்த இந்த சம்பவம் குறித்து குடும்பத்தினர் அளித்த புகாரின் காரணமாக வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இந்நிலையில் இறந்த பிரசாந்தின் தற்கொலை குறிப்பில், கடந்த 2014-ம் ஆண்டு முதல் முடி உதிர்தலுக்காக சிகிச்சை பெற்று வந்ததாகவும், ஆனால் சிகிச்சைக்கு பின் தனது புருவ முடி உட்பட அனைத்து முடியும் முழுமையாக கொட்டிவிட்டதாக தெரிவித்துள்ளார். மேலும், இதற்கு மருத்துவர் அளித்த மாத்திரைகள் தான் காரணம் என குறிப்பிட்டுள்ளார்.
சிகிச்சை அளித்த மருத்துவர் மீது புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம்சாட்டினர். ஆனால் இதுகுறித்து பிரசாந்திற்கு சிகிச்சை அளித்த மருத்துவர், அவருக்கு சரியான சிகிச்சை தான் அளிக்கப்பட்டது என தெரிவித்துள்ளார். இதுகுறித்து மேலும் விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: நான் தூக்கிட்டுக்கொள்கிறேன் - தொடர் சர்ச்சையில் சுகேஷ் சந்திரசேகரின் அடுத்த கடிதம்