குருகிராம்: தெலங்கானாவின் மாசோனி பூங்காவில் நேற்று (மே 1) இளைஞர் மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார்.
இதனைக் கண்ட அக்கம்பக்கத்தினர் காவல் துறையினருக்குத் தகவல் கொடுத்தனர். அதன்பேரில் அங்கு வந்த காவல் துறையினர் இளைஞரின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இறந்த இளைஞரின் சட்டைப் பையில் கடிதம் ஒன்று எடுக்கப்பட்டது. அதில், ’’என்னுடைய உறவினர் ஒருவருக்கு ஆக்சிஜன் உதவி செய்ய முடியாத காரணத்தினால், மனமுடைந்து தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்தேன்" என்று எழுதப்பட்டிருந்தது.
வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் மேற்கொண்டு விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க: தேர்தல் ஆணையம் தனது தோல்வியை மறைக்க முடியாது'