ETV Bharat / bharat

துண்டு துண்டாக வெட்டப்பட்டு 3 பைகளில் கிடந்த ஆணின் சடலம் மீட்பு! - santhosh kumar singh

உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூர் அருகே ஆண் ஒருவர் துண்டுத் துண்டாக வெட்டப்பட்டு சாக்கு மூட்டையில் சடலமாக இருந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

துண்டு துண்டாக வெட்டப்பட்டு 3 பைகளில் கிடந்த ஆணின் சடலம் மீட்பு!

author img

By

Published : Jun 18, 2023, 11:27 AM IST

Updated : Jun 18, 2023, 3:00 PM IST

கான்பூர்: உத்தரப்பிரதேச மாநிலம், கான்பூர் மாவட்டம், கர்னல்கஞ்ச் காவல் நிலையம் பகுதியில் தனியார் மருத்துவமனை இயங்கி வரும் நிலையில் நேற்று (ஜூன் 17) மக்கள் செல்லும் போது, சாலை முழுவதும் துர்நாற்றம் வீசி உள்ளது. சந்தேகத்தின் அடிப்படையில் அப்பகுதி மக்கள் கர்னல்கஞ்ச் காவல் நிலையத்திற்குத் தகவல் அளித்த நிலையில், போலீசார் சடலத்தைக் கைப்பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

கர்னல்கஞ்ச் பகுதி மக்கள் சாலை முழுவதும் துர்நாற்றம் வீசியதை அடுத்து யாரோ ஒரு உயிரினத்தைக் கொன்று, சாலையில் வீசி இருப்பார்கள் என அருகில் உள்ள கடைக்காரர்கள் சந்தேகமடைந்தனர். அப்போது, அந்த வழியாக சென்ற ஒருவர் சாக்கடை அருகே மூன்று வெவ்வேறு சாக்கு பைகளை பார்த்துள்ளார். சந்தேகத்தில், உடனடியாக கர்னல்கஞ்ச் காவல் நிலையத்திற்குத் தகவல் அளித்துள்ளனர்.

கர்னல்கஞ்ச் போலீசார் தகவல் அறிந்து வந்து சாக்குகளை திறந்தவுடன், சாக்கு பையில் நடுத்தர வயது ஆணின் கால்களும், சிலவற்றில் உடற்பகுதியும் கட்டப்பட்டிருந்தது தெரிய வந்துள்ளது. மூன்று வெவ்வேறு சாக்கு மூட்டைகளில் நடுத்தர வயது ஆடவரின் சடலம் கிடந்ததைக் கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.

இதையும் படிங்க:Hijavu Scam: ஹிஜாவு மோசடியில் தம்பதி கைது: ரூ.500 கோடி சுருட்டியது அம்பலம்!

தகவல் அறிந்த கர்னல்கஞ்ச் ஏசிபி மோ. அக்மல் கான் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து தடயவியல் குழுவிற்குத் தகவல் அனுப்பினார். மேலும், பல தனிப்படை குழுக்களை அமைத்து தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் பற்றி கர்னல்கஞ்ச் காவல் நிலையப் பொறுப்பாளர் சந்தோஷ் குமார் சிங் கூறுகையில், சாக்கு பைகளில் கிடந்த சடலம் சுமார் மூன்று நாள்கள் பழமையானது எனவும்; இறந்த நபர் சுமார் நடுத்தர வயதுடையவர் என தடயவியல் ஆய்வில் தெரிய வந்துள்ளது என்று தெரிவித்தார்.

சடலத்தை யாரோ எறிந்துவிட்டு சென்று உள்ளனர் எனவும் கூறினார். மேலும், குற்றவாளியைக் கண்டுபிடிக்க தனிப்படை அமைத்துள்ளனர் எனவும் குறிப்பிட்டார். இந்தச் சம்பவம் கர்னல்கஞ்ச் பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்தச் சம்பவம் நடைபெறுவதற்கு இரண்டு நாட்கள் முன் ஒரு பெண்ணின் உடல் கர்னல்கஞ்ச் காவல் நிலையம் அருகே உள்ள பிசாட்டி மயானத்தில் கிடந்துள்ளது. மேலும், அந்தப் பெண்ணின் தலை செங்கற்களால் அடிக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது.

இந்நிலையில், கர்னல்கஞ்ச் காவல் நிலைய போலீசார் அடுத்த நாளே குற்றவாளியைக் கண்டுபிடித்தனர். இதற்கிடையே இரண்டு நாட்களில் இதைப் போன்று ஒரே பகுதியில் நடந்த சம்பவம் மக்கள் மற்றும் போலீசார் இடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க:முன்னாள் டிஜிபி திலகவதியின் மகன் மற்றும் மகனின் ரகசியத்தோழி மீது போலீசார் வழக்குப்பதிவு!

Last Updated : Jun 18, 2023, 3:00 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.