தெலங்கானா மாநிலத்தை சேர்ந்த பெண் மென்பொறியாளர் வீட்டினுள் புகுந்த இளைஞர் தன்னை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தியுள்ளார். அதற்கு அப்பெண் மறுக்கவே விரக்தியடைந்த அந்நபர், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அவரை சரமாரியாகத் தாக்கியுள்ளார்.
இதில், தன் மகளைக் காப்பாற்ற வந்த பெண்ணின் தாயாருக்கும் லேசானா காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, மகளை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். நேற்று மாலை (மார்ச்2) நடந்த இத்தாக்குதல் குறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில், திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்ததுதான் காரணம் எனத் தெரியவந்தது.
மேலும், தாக்குதலுக்குள்ளான பெண் அழகு பராமரிப்பு நிலையத்தில் பணிபுரிவதும், இளைஞருக்கு அந்தப் பெண் இரண்டு ஆண்டுகளாக பரீட்சயம் என்பதும் தெரியவந்தது.
இதையும் படிங்க:முன்விரோதம் காரணமாக இளைஞர் கொலை!