ETV Bharat / bharat

என் மனைவியை ரூ.1 லட்சத்துக்கு விற்றுவிட்டான்- பகீர் கிளப்பிய புகார் - லட்சத்தில் விற்பனையான கணவன்

எனது மனைவியை அண்டை வீட்டுக்காரன் ரூ.1 லட்சத்துக்கு விற்றுவிட்டான், அவன் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல் நிலையத்தில் இளைஞர் ஒருவர் புகார் அளித்துள்ளார்.

Man
Man
author img

By

Published : Apr 19, 2022, 1:21 PM IST

முசாபர்நகர்: உத்தரப் பிரதேச மாநிலம் முசாபர்நகரில் உள்ள ஜன்சத் காவல் நிலையத்தில் எழுத்துப்பூர்வமாக ஒருவர் புகார் மனு ஒன்றை அளித்தார்.

அந்த மனுவில், “தனது மனைவியை அண்டை வீட்டுக்காரன் ரூ.1 லட்சத்துக்கு விற்பனை செய்துவிட்டார்” என்று கூறியிருந்தார்.

இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த காவலர்கள் தொடர்ந்து விசாரணை நடத்தினார்கள். தொடர்ந்து அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் சம்பந்தப்பட்ட இளைஞரின் நடவடிக்கை பிடிக்காமல் அவர் மனைவி அவரை விட்டு பிரிந்து சென்றுவிட்டார்.

இந்த நிலையில் சம்பந்தப்பட்ட நபர், பக்கத்து வீட்டுக்காரருடன் இணைந்து காவல் நிலையத்தில் மனைவி மீது போலியாக புகார் அளித்துள்ளார். விசாரணையில் இந்த விவரங்கள் தெரியவந்த நிலையில், புகார்தாரர் மற்றும் பக்கத்து வீட்டு நபர் மீது காவலர்கள் வழக்குப்பதிவு செய்தனர்.

காவல் நிலையத்தில் இளைஞர் அளித்த புகாரில், என் மனைவி அழகாக இருப்பதால், அவரை பக்கத்துவீட்டுக்காரர் ரூ.1 லட்சத்துக்கு விற்று விட்டார் எனக் கூறியிருந்தார் .

இதையும் படிங்க: குளிர்பானத்தில் மயக்க மருந்து; பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.