லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள சாலையோர உணவகம் ஒன்றில், சமையல்காரர் சப்பாத்தியில் எச்சில் துப்பி சமைப்பது போன்ற வீடியோ சமூகவலைதளத்தில் அதிகம் பகிரப்பட்டுவருகிறது. அந்த வீடியோவில், சமையல்காரர் சப்பாத்தி சுடுவதற்கு முன்பு மாவில் எச்சில் துப்புவது போல் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
இதனால் கிளம்பிய சர்ச்சை காரணமாக, காவலர்துறையினர் விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்ட உணவக சமையல்காரரை சில நாள்களுக்கு முன்பு கைது செய்துள்ளனர். முதல்கட்ட தகவலில், கைது செய்யப்பட்டவர் பிகார் மாநிலத்தை சேர்ந்த தமீசுதீன் என்பது தெரியவந்தது.
இதையடுத்து தமீசுதின் பிணையில் நேற்று(அக்.19) வெளியே வந்ததாக கூறப்படுகிறது. இதேபோல தமிழ்நாட்டில், சில வாரங்களுக்கு முன்பு காலிஃப்ளவர் பக்கோடாவில் ரத்தத்துடன் கூடிய பேண்டேஜ் கிடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: உணவக சாம்பாரில் பல்லி, வாடிக்கையாளர் அதிர்ச்சி