ETV Bharat / bharat

ட்ரீட்டு கொடுங்க அமித் ஷா ஜி - பதிலடி கொடுத்த மம்தா

கொல்கத்தா: மேற்குவங்கம் பின்தங்கியுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குற்றம்சாட்டிய நிலையில், மாநிலத்தின் பொருளாதாரம் குறித்த தரவுகளை பகிர்ந்து அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி பதிலடி கொடுத்துள்ளார்.

மம்தா
மம்தா
author img

By

Published : Dec 22, 2020, 6:07 PM IST

வருகிற மே மாதம், மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பாஜகவுக்கும் மாநிலத்தை ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவிவருகிறது.

சமீபத்தில், மேற்கு வங்கத்திற்கு சென்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மாநிலம் தொழில்துறையில் பின்தங்கியுள்ளதாகவும், குற்றச் செயல்கள் அதிகரித்துள்ளதாகவும் சராமாரி குற்றச்சாட்டு சுமத்தினார்.

குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை

இந்நிலையில், பொருளாதாரம் தொழில்துறை குறித்த தரவுகளை பகிர்ந்து அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி பதிலடி கொடுத்துள்ளார். அமித் ஷாவின் குற்றச்சாடுகள் பொய்யானவை என நிரூபிக்கப்பட்டுள்ளதால் அவர் தனக்கு தோக்லா மற்றும் மற்ற குஜராத்தி உணவு வகைகளை ட்ரீட்டாக கொடுக்க வேண்டும் என மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களிடம் இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், "கொடுங்கனவு போல் அவர் மேற்குவங்கத்தை சித்தரிக்கிறார். வளர்ச்சியில் பின்தங்கிய வேலைவாய்ப்பு இல்லாத மாநிலம் போல் மேற்குவங்கத்தை அவர் காண்பிக்கவிரும்புகிறார். 11 ஆண்டுகளுக்கு முன்பு, மாநிலம் எப்படி இருந்தது என்பது உங்களுக்கு தெரியுமா? உங்களால் எப்படி ஒப்பீடு செய்ய முடிகிறது. உண்மையை தெரிவித்திருந்தால் நான் ஆட்சேபிக்க மாட்டேன். ஆனால், குற்றச்சாட்டுகளில் உண்மை இல்லை என்றால், அதற்கு சவால் விடுவேன்.

அனைத்து முனைகளிலும் வளர்ச்சி

கடந்த பத்தாண்டுகளில், அரசியல் ரீதியான படுகொலைகள் குறைந்துள்ளது. நாட்டின் உள்துறை அமைச்சர் ஒன்று சொல்கிறார் என்றால், அதற்கு தகுந்த தரவுகள் சான்றாக இருக்க வேண்டும்.

அனைத்து முனைகளிலும் பாஜக உள்ளது. ஆகவே, மாநிலம் மோசமாக உள்ளது போன்று அமித் ஷா சித்தரிக்க முயல்கிறார். எனக்கு சவால் விடுத்தார் அதற்கு பதிலடி தந்துள்ளேன்" என்றார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.