ETV Bharat / bharat

'சங்பரிவாரில் அனைவரும் மோசமானவர்கள் அல்ல' - ஆர்எஸ்எஸ்ஸைப் புகழ்ந்த மம்தா - TMC and BJP

மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா பானர்ஜி ராஷ்டிரிய சுவயம்சேவக் சங்கத்தைப் பாராட்டியும், அதில் உள்ளவர்கள் அனைவரும் மோசமானவர்கள் இல்லை எனவும் கூறினார்.

Etv Bharat‘சங்பரிவாரில் அனைவரும் மோசமானவர்கள் அல்ல’ - ஆர்எஸ்எஸ்ஸைப் புகழ்ந்த மம்தா

author img

By

Published : Sep 2, 2022, 5:05 PM IST

கொல்கத்தா: மேற்கு வங்காள முதலமைச்சரும், பாஜகவை கடுமையாக எதிர்ப்பவருமான மம்தா பானர்ஜி ஆர்.எஸ்.எஸ்ஸில் உள்ள அனைவரும் மோசமானவர்கள் இல்லை எனவும், சில நல்லவர்களும் அங்கு உள்ளனர் எனவும் பேசியுள்ளார். இது அரசியல் அரங்கில் பேசுபொருளாகி இருக்கிறது. இந்த வலதுசாரி அமைப்பின் ஒரு பகுதியினர் பாஜக பின்பற்றும் கொள்கைகளை ஆதரிக்கவில்லை எனவும் கூறினார்.

இது குறித்து அவர் கூறுகையில், 'ஆர்.எஸ்.எஸ்ஸில் உள்ள அனைவரும் மோசமானவர்கள் இல்லை. அவர்கள் இப்போது மோசமாக இருப்பதாக நான் நினைக்கவில்லை. ஆர்.எஸ்.எஸ்ஸில் நல்லவர்களும் உள்ளனர். மேலும் பாஜகவை ஆதரிக்காதவர்கள் பலர் இருக்கிறார்கள். அவர்களும் ஒரு நாள் தங்கள் மௌனத்தைக் கலைப்பார்கள்' எனக் கூறினார்.

இதனையடுத்து சிபிஐ(எம்) மூத்த தலைவர் சுஜன் சக்கரபாணி மம்தாவை கடுமையாகச் சாடியுள்ளார். மம்தாவை சந்தர்ப்பவாதி எனக் கூறினார். இதிலிருந்து திரிணாமுல் காங்கிரஸ், பாஜகவுக்கு எதிரான நம்பிக்கையான கட்சி இல்லை என்பது உறுதியாகியுள்ளது என வெளிப்படையாக சாடினார்.

இதைத்தொடர்ந்து மம்தாவின் கருத்திற்கு எதிராகப் பலரும் கருத்துத் தெரிவித்து வருகின்றனர். இதற்கு அகில இந்தியா மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் (ஏஐஎம்ஐஎம்) தலைவர் அசாதுதீன் ஓவைசி, "2003இல் மம்தா ஆர்எஸ்எஸ்ஸை "தேசபக்தர்கள்" என்று அழைத்தார். அதையொட்டி, ஆர்எஸ்எஸ் அவரை "துர்கா" என்று அழைத்தது. ஆர்எஸ்எஸ் இந்துக்களின் ராஜ்யத்தை விரும்புகிறது. அதன் வரலாறு இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்பு குற்றங்கள் நிறைந்தது. குஜராத் படுகொலைக்குப் பின்னர், அவர் நாடாளுமன்றத்தில் பாஜக அரசை ஆதரித்தார்’ எனக் கூறியுள்ளார்.

முன்னதாக வங்காளத்தில் நடந்த சட்டப்பேரவைத்தேர்தலில் போட்டியிட்ட ஓவைசி, இஸ்லாமிய பெரும்பான்மைத் தொகுதிகள் உட்பட ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. இதனால் அங்கு அவர் திரிணாமுல் மற்றும் BJP ஆகிய இரண்டிற்கும் எதிராக தன்னை நிலைநிறுத்திக்கொண்டார். இந்நிலையில் மம்தாவின் இந்த கருத்து பல இடதுசாரிகளிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:AIFF President: பைசங் பூட்டியாவை வீழ்த்தினார் கல்யாண் சௌபே...

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.