ETV Bharat / bharat

மேற்குவங்க இடைத்தேர்தல்: மம்தா தொடர்ந்து முன்னிலை

மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி போட்டியிட்ட பவானிபூர் சட்டப்பேரவைத் தொகுதியில் தொடர்ந்து முன்னிலை வகித்துவருகிறார்.

மேற்குவங்க இடைத்தேர்தல்
மேற்குவங்க இடைத்தேர்தல்
author img

By

Published : Oct 3, 2021, 12:30 PM IST

மேற்குவங்க மாநிலத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் திருணமுல் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் வெற்றிபெற்று மீண்டும் ஆட்சி அமைத்தது. அக்கட்சியின் தலைவரும், முதலமைச்சருமான மம்தா பானர்ஜி போட்டியிட்ட நந்திகிராம் தொகுதியில் தோல்வியைத் தழுவினார். இருப்பினும் முதலமைச்சராக அவர் பதவியேற்றார்.

முதலமைச்சராகப் பதவியேற்ற ஆறு மாதத்திற்குள் சட்டப்பேரவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற நிலையில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு பவானிபூர் தொகுதியில் போட்டியிட்டார். அத்தோடு நிறுத்திவைக்கப்பட்ட ஜாங்கிபூர், சாம்சர்கஞ்ச் ஆகிய இரண்டு தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.

21 சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை

இரு நாள்களுக்கு முன் வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில் இன்று (அக். 3) வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்குத் தொடங்கி நடைபெற்றுவருகிறது. தேர்தலில் பதிவான வாக்குகள் 21 சுற்றுகளாக எண்ணப்படுகின்றன.

ஆறு சுற்றுகளின் வாக்கு எண்ணிக்கை நிலவரப்படி பவானிபூரில் மம்தா பானர்ஜி, அவரை எதிர்த்துப் போட்டியிட்ட பாஜகவின் பிரியங்கா திப்ரேவாலைவிட 23 ஆயிரம் வாக்குகள் முன்னிலையில் உள்ளார்.

அதேபோல் ஜாங்கிபூர், சாம்சர்கஞ்ச் சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் திருணமுல் காங்கிரஸ் வேட்பாளர்கள் முன்னிலையில் உள்ளனர்.

இதையும் படிங்க: மம்தாவின் தலையெழுத்தைத் தீர்மானிக்கும் அக். 3: திருணமுல்லில் லப்டப்...!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.