ETV Bharat / bharat

இடைத்தேர்தல்: மம்தா பானர்ஜி இன்று வேட்புமனு தாக்கல் - மேற்கு வங்க முதலமைச்சர்

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, பபானிபூர் சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கு இன்று (செப். 10) வேட்புமனுவைத் தாக்கல்செய்கிறார்.

Mamata Banerjee
Mamata Banerjee
author img

By

Published : Sep 10, 2021, 9:24 AM IST

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் எட்டு கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடந்து முடிந்தது. இதில், மம்தா பானர்ஜி நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்டு, பாஜக வேட்பாளர் சுவேந்து அதிகாரியிடம் தோல்வி அடைந்தார். இருப்பினும், அதிக தொகுதிகளில் திருணமூல் காங்கிரஸ் வெற்றிபெற்று, மம்தா பானர்ஜி முதலமைச்சராகப் பெறுப்பேற்றார்.

அதனால், மம்தா பானர்ஜி ஆறு மாதத்திற்குள் மீண்டும் ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிட்டு சட்டப்பேரவை உறுப்பினராக வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனிடையே, மேற்கு வங்கத்தில் காலியாக உள்ள மூன்று சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு வரும் 30ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்த இடைத்தேர்தலில் மம்தா பானர்ஜி, பபானிபூர் தொகுதியில் போட்டியிடுவார் என்று திருணமூல் காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

அந்த வகையில், மம்தா பானர்ஜி இன்று பபானிபூர் இடைத்தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளார். இந்தியத் தேர்தல் ஆணையம் வெளியிட்ட அட்டவணையின்படி, மேற்கு வங்கத்தில் பபானிபூர், சம்சர்கஞ்ச், ஜாங்கிபூர் ஆகிய தொகுதிகளில் செப்டம்பர் 30ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்தத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 3ஆம் நடைபெறுகிறது.

இதையும் படிங்க: பாஜகவுக்கு எதிராக நாடு தழுவிய இயக்கம் - மம்தா அழைப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.